எதிரி எனக்கு அளித்த வரம்
இடர்சூழ்ந்தவாழ்வே இன்னும் வருக. என்னை விட்டகலாதே. நீ வரும்போதே நான் புதிது புதிதாகப் பிறக்கிறேன். இருளையும் பகலையும் இனம் காணுகின்றேன். மேலும் மேலும் எழவேண்டுமென்ற எண்ணம் என்னுள்ளே பெறுகிறது. துயரம் அழுவதற்காக வருவதில்லை எழுவதற்கென்று இப்போதுணர்கின்றேன். இன்னலிடை இருக்கும் போது இன்பமறிகின்றேன். போரிடும் எண்ணம் பிறக்கிறது ஊர்விட்டகலாது இருந்தவரை உலகம் இவ்வளவு விரிந்ததென்று விளங்கவில்லை. இடம்பெயர்ந்து செல்லச்செல்ல திசைகளும் நீண்டு செல்கிறது. இதுகாலவரை முட்டைக்குள்ளிருந்தேனென அறிகிறேன். உறவு நரம்புகளில் புதிய குருதி பாய்ந்து எவரெவரின் கோடியெல்லாம் எனக்கு […]
Read More