பாலசந்திரனுக்காக அழு எழு என்னினமே!
பாலசந்திரனுக்காக அழு எழு என்னினமே!
முள் குத்தினால் கூட
துடிப்பாய்
குருவிக்கு காயம் பட்டால்
கூட தவிப்பாய்!
ஒரு ராணுவமே
தேவைப்பட்டது
உன்னைக் கொல்ல!
சடலமாய்
ஐ.நா.சபை போகிறாய்
இன சோகம் சொல்ல !
தரையில் கிடப்பவனே
சாவை சாகடிக்க பிறந்தவனின்
மகனே !
உயிரை விட்டாய்
எம் உயிரை
உலுக்கி விட்டாய் !
போர்வை கூட
இல்லாமல் கிடக்கிறாய்
மயிலுக்கு
போர்வை தந்ததையா
நினைக்கிறாய்!
பட்டாம்பூச்சி மேனியில்
குண்டுகள்
இத்தனையோ!
பொறிகளில் இருந்து
தீப்பந்தம் பிறக்கும்
எத்தையோ !
அன்பான இனமே அழு
அடுத்து நீதான்
சாகப்போகிறாய் எழு!
உன்மேனியில் ஐந்து தோட்டா
துரோக நாட்டின்
எண்ணிக்கை!
உன் உடல்
ஈழ நாட்டிற்கு
காணிக்கை !
எம் தேசிய தலைவர் மீதும்,
தமிழ் மக்கள் மீது
பாசமுடன் …
வே.ச.மணிகண்டபிரபாகரன்
(.திரைபடஇயக்குனர்)
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”