நீலன் காலத்தின் பதிவு !
எதிரியின் குகையெங்கும் உலாவந்த பெருநெருப்பு. எட்டாத தூரமெல்லாம் எளிதாய் ஏறிவந்த எரிமலையின் குடியிருப்பு.
Read Moreஎதிரியின் குகையெங்கும் உலாவந்த பெருநெருப்பு. எட்டாத தூரமெல்லாம் எளிதாய் ஏறிவந்த எரிமலையின் குடியிருப்பு.
Read Moreசிறிலங்கா தலைநகர் கொழும்பு துறைமுகத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். சிறிலங்கா தலைநகர் கொழும்புத் துறைமுகத்தில் 12.04.1996 அன்று ஊடுருவி சிறிலங்கா கடற்படையினரின் மூன்று சரக்குக் கப்பல், கடற்படைப் படகுகள், துறைமுகக் கட்டிடத் தொகுதி மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் ரதீஸ், கடற்கரும்புலி மேஜர் ரதன், கடற்கரும்புலி மேஜர் ஜனார்த்தனன், கடற்கரும்புலி மேஜர் ரவாஸ், கடற்கரும்புலி மேஜர் பரன், கடற்கரும்புலி மேஜர் பொய்யாமொழி, கடற்கரும்புலி கப்டன் சுபாஸ், […]
Read Moreகடற்கரும்புலி கப்டன் வீரமணி வீரவணக்க நாள் இன்றாகும். மன்னார் மாவட்டம் கற்பிட்டிக் கடற்பரப்பில் 12.04.2000 அன்று சிறிலங்கா கடற்படையினரின் நீருந்து விசைப்படகு மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் வீரமணி ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். || வெற்றிகளுக்கு வித்திட்டு கடலன்னை மடியில் உறங்கும் உயிராயுதம்……… தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! “புலிகளின் தாகம் தமிழீழத் […]
Read Moreமட்டு – அம்மாறை மாவட்ட புலனாய்வுத்துறை துணைப் பொறுப்பாளர் லெப். கேணல் நீலன் வீரவணக்க நாள் இன்றாகும். தென் தமிழீழத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணாவின் துரோகத்தனத்தால் துரோகிகள் மேற்கொண்ட தீய செயல்களால் 12.04.2004 அன்று துரோகி கருணாவால் சுட்டபட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட புலனாய்வுத்துறை துணைப் பொறுப்பாளர் லெப். கேணல் நீலன் உட்பட ஏனைய போராளிகளின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். துரோகம் சூழ்ந்து நின்ற போதும் தமிழீழ விடியலின் தணியாத […]
Read Moreதென் தமிழீழத்திலிருந்து வேவுநடவடிக்கை ஒன்றை முடித்து 11.04.2000 அன்று தளம் திரும்பிக்கொண்டிருந்த போது திருமலைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் காவியமான கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் அவர்களின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழத்தின் போரியல் வரலாற்றில் பல கரும்புலி நடவடிக்கைசென்று மீண்ட வரலாறு இக் கரும்புலிக்கும் உண்டு. ஆண்குரல்:- “அம்மா…. எங்களுடைய தாயகமண்ணின் மீட்சிக்காக…. என்னால் செய்யக்கூடிய தியாகம் எதுவோ…. அதைத்தான் நான் செய்யப்போகிறன்.. அதை மனமகிழ்வோடும் பூரண சந்தோஷத்தோடும் செய்கின்றேன். உங்களுக்கு […]
Read Moreகரும்புலி மேஜர் அறிவுக்குமரனின் குறிப்பேட்டு வரிகளிவை. பல கரும்புலி நடவடிக்கைகளில் பங்கு கொண்டு அவற்றைக் கருவேங்கை என்ற பெயரில் வைரவரிகளாக்கிய மேஜர் அறிவுக்குமரன் 11.04.2000 அன்று திருகோணமலைக் கடற்பரப்பில் கடற்படையுடனான மோதலின் போது வீரச்சாவடைந்தார். எவ்வளவு கஸ்ரப்பட்டு பயிற்சி எடுத்தும் கூட இதுவரை நடவடிக்கைக்குச் செல்ல சந்தர்ப்பம் கிடைக்காதபடியால் செங்கதிர் அழுதுகொண்டே இருந்தாள். அவள் மட்டுமல்ல எல்லோருமே. MI.17 உலங்கு வானூர்தி மீதான தாக்குதலுக்குச் சென்றபடியால் எமக்கும் இதுவரை சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. 25.01.1998 காலை மலர்வதற்கு முன் எங்கள் […]
Read Moreதமிழீழமெங்கும் விடுதலைக்காய், களமாடிய வீரத்தளபதி தளபதி பானு நீண்ட வரலாற்றையும், காலத்திற்குக்காலம் எழுச்சிகொண்டு அரசாட்சி உரிமையையும் தன்னகத்தே கொண்டுள்ள தமிழினம், தமிழீழத்தில் எழுச்சிகொண்டபோது தாய்மண்ணின் விடுதலைக்காக எழுந்த மாபெரும் விடுதலைப்போரில் விடுதலைப் புலிகள் இயக்கம் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் உறுதியான வழி நடத்தலில் இலக்குத்தவறாத இலட்சியப் பாதையில் முள்ளிவாய்க்கால் வரை பயணித்தது. தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராளியாகப் பிறந்தவர் எமது தேசியத் தலைவர். அவரினால் உருவாக்கப்பட்ட போராளிகளில் இணைந்த காலம்முதல் இறுதிவரை பயணித்த தளபதிகளில் […]
Read Moreவிலாசம் மறந்த வீரனின் சுவடுகள் தளபதி ஜெயம். வெற்றிகளுக்கு விழுதான வேர்களை உலகம் என்றைக்கும் உணர்ந்து கொள்வதில்லை. வீரத்தின் வேர்களுக்கான விலாசங்களும் அப்படியே வெளியில் அவை ஒருபோதும் வெளிச்சமிடப்படுவதில்லை. இத்தகைய வேராக வெளியில் வராத விலாசமாக எங்களோடு எங்கள் மக்களோடு வாழ்ந்து வரலாறாகிப் போனவர்களில் தளபதி ஜெயமண்ணாவும் ஒருவராக வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட ஒரு அற்புத மனிதன். கதாநாயகத் தகுதியையோ கவர்ச்சியான மேடைப்பேச்சு வல்லுனர்களையோ புலிகளின் பாசறைகள் வளர்த்ததில்லை. தலைவனின் வேதம் போல ‚’சொல்லுக்கு முன் செயல்’ […]
Read Moreவிடுதலைப்போராளிகள் பதித்துச்சென்ற தியாகங்களின் மற்றுமொரு வடிவம் தளபதி ரமேஸ். கொக்கட்டிச்சோலை அரசடித்தீவை பிறப்பிடமாகக் கொண்ட தளபதி ரமேஸ் (துரைராஜசிங்கம் தம்பிராஜா) 1986 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து தளபதியாக பணியாற்றியிருந்தார். சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனஅழிப்பு, போர்க்குற்றங்கள் தொடர்பில் புலம்பெயர் தமிழ் மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்கள் கடந்த வாரம் ஒரு முக்கிய திருப்பத்தை தந்துள்ளது. சிறீலங்கா அரச தலைவரின் பிரித்தானியா பயணம், அவரை கைதுசெய்வதற்கு முயன்ற பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழ், புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கு […]
Read Moreதமிழீழ விடுதலையின் வீச்சு கேணல் நாகேஸ் மட்டக்களப்பு புல்லுமலையை பிறப்பிடமாகக் கொண்ட கேணல் நாகேஸ் 1985-86 காலப் பகுதியில் தன்னை விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொண்டார். ஆரம்பகாலத்தில் லெப்.கேணல் றீகன் அவர்களின் அணியில் தனது சமர்க்களப் பணியை ஆரம்பித்தார். காலங்களில் சிறப்பாக செயல்ப்பட்ட அவர் இந்திய ஆக்கிரமிப்பு படைகளுக்கெதிரான யுத்தம் ஆரம்பமானபோது புல்லுமலைப் பகுதி விடுதலைப் புலிகளின் முகாமின் பொறுப்பாளராக நியமிக்கப் பட்டார். இந்தக் காலகட்டத்தில் அவரின் தலைமையில் இந்திய,சிறிலங்கா படையினருக்கெதிரான பல வெற்றிகரத் தாக்குதல்கள் […]
Read Moreமுல்லை மாவட்டம் ஆனந்தபுரம் பகுதியில் வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள படைகள் வீசிய இரசாயன நச்சுக்குண்டுத் தாக்குதலில் 04.04.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் ஆதவன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா, கேணல் நாகேஸ், கேணல் தமிழ்ச்செல்வி, கேணல் அமுதா உட்பட ஆனந்தபுரத்தில் உயிர்நீத்த ஏனைய மாவீரர்களின் 06ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். முப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக, […]
Read Moreமகத்தான மாவீரன் கேணல் வீரத்தேவன்! தாயை விட தாய்நாடுதான் முக்கியம் என்பதை சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன் அந்த வார்த்தைகளின் உயிருள்ள உருவத்தை அவனில் நான் கண்டேன். வீரத்தேவனின் துணிகரமான சாதனைகளை என்னால் எழுத்தில் வர்னிக்க முடியாதவை இருந்தாலும் எனது மனதைத்தொட்ட ஒரு நிகழ்வை மட்டும் அவனது மன உறுதியை எழுத உந்தியது.1996ஆம் ஆண்டு 9ஆம் மாதம் ஆரம்பத்தில் மட்டு அம்பாறை மாவட்ட புலனாய்வுப்பகுதிக்குப் பொறுப்பாளராக இருந்த திரு நிக்சன் அவர்கள் வவுனியா மாவட்ட புலனாய்வுப்பொறுப்பை ஏற்றிருந்த காலம் நிக்சன் […]
Read Moreயாழ் மாவட்டம் வடமராட்சிப் பகுதியில் கொற்றாவத்தை, வதிரியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் 1985 – 86 காலப்பகுதியில் இணைந்து கொண்டு இந்தியாவில் பயிற்சி பெற்றவர். விமான எதிர்ப்பு ஏவுகணைகள் சுடும் பயிற்சிக்காக இந்திய இராணுவத்தால் தெரிவு செய்யப்பட்ட பத்து விடுதலைப்புலிகள் உறுப்பினர்களில் ஒருவர். இவரது குறி பார்த்து சுடும் திறமையைக் கண்டு கொண்ட லெப்.கேணல் பொன்னம்மான் தலைவருக்கு இவர் பற்றிச் சொல்லி அறிமுகப்படுத்திய காலத்திலிருந்து அவரது மெய்ப்பாதுகாவலர் குழுவில் ஒருவராக சிறப்பாக பணியாற்றியவர். இந்திய இலங்கை […]
Read More25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த புயல் பிரிகேடியர் தீபன் கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட தீபனின்(வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன். இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டார். யாழ் மாவட்டம் தென்மராட்சியின் வரணி தான் தீபனின் பூர்வீகமாகும். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் விஞ்ஞான பீட மாணவனாகவிருந்த தீபன் பெற்ற க.பொ.த உயர் தர பெறுபேறுகள் அவருக்கு இலகுவாக பல்கழைக்கழக இடத்தைப் பெற்றுத்தந்திருக்கும் ஆனால் வரலாற்றுக் கடமையை உணர்ந்து போராளியானார் தீபன். தென்மராட்சிப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளராக விளங்கிய […]
Read More‘என்னக்கா ? அண்ணா என்ன சொல்கிறார் ?’ பிரிகேடியர் துர்கா அன்பான முகம். சாந்தமான தோற்றம். எவரையும் பணிவுடன் அணுகும் அவரின் பண்பு. பல ஆயிரக்கணக்கான பெண்களை வழிநடத்தும் தலைமைத்துவப் பாங்கு. அனைத்தும் நிச்சயமாய் அவருக்கே உரித்தானது. ஆனந்தபுரத்தில் 20,000 சிங்களச் சிப்பாய்கள் வெறும் 700 விடுதலைப் புலிகளை மட்டும் பெட்டிச் சண்டையிட்டு 500 மீற்றருக்குள் வைத்து கொலைக்களமாக இரசாயனக் குண்டடித்து கொன்ற களத்தில் அவரும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார் என்பதை சோதியா படையணியில் மாத்திரமல்ல, எந்த […]
Read Moreதமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட மணிவண்ணன். தொடக்க காலத்திலேயே கேணல் ராயு அவர்களுடன் இணைந்து தனது விடுதலையின் பணியை மேற்கொண்டிருந்தார். கேணல் ராயு அவர்களின் வீரச்சாவுக்கு பின்னர் கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதியாக தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டிருந்தார். கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதியாக நியமிக்கப்பட்ட பிரிகேடியர் மணிவண்ணன் அவர்களின் செயர்ப்பாட்டுக் காலப்பகுதியில் தான் சிறிலங்காப்படைகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்லறித் தாக்குதலில் பாரிய இழப்புக்களை சந்தித்திருந்தது என்பது குறிப்பிடத் தக்ககது. […]
Read Moreதலைவரின் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுத்தவர் பிரிகேடியர் விதுசா விடுதலைப் புலிகளின் மகளீர் படைப் பிரிவின் தோற்றமும் வளர்ச்சியும் எழுச்சியும் எமது இயக்கம் படைத்த மாபெரும் சாதனைகளில் ஒன்று. ஒரு புதுமைப் பெண்ணை, புரட்சிகரப் பெண்ணை எமது விடுதலை இயக்கம் படைத்திருக்கிறது. இந்த முகவுரை விதுசா பற்றிய நினைவுப் பகிர்வை அறிமுகஞ் செய்யப் போதுமானது. குருக்கள் கந்தையா, ஞனாம்பிகை இணையருக்கு ஞானபூரணி என்ற இயற்பெயர் பூண்ட விதுசா மூத்த மகளாக 1969 செப்ரம்பர் 29ம் நாள் கரவெட்டி […]
Read Moreசமர்கள நாயகனுக்கு சளைக்காத சீடன் பிரிகேடியர் தீபன் அறம் சார்ந்த வீரம், அதுதான் தமிழ் தேசிய ராணுவத்தின் கட்டமைப்பு. இந்த உலகத்தில் எந்த ராணுவ வீரர்களுக்கும் இல்லாத ஒழுக்கம், தமிழ் தேசிய ராணுவத்திற்கு மட்டும்தான் உண்டு. இதற்காக தமிழர்கள் ஒவ்வொருவரும் கர்வப்பட்டுக் கொள்ளலாம். தமிழ் தேசிய ராணுவத்தை எமது தேசிய தலைவர் அறம் வழி நின்று கட்டியமைத்தார். அறத்தோடுத்தான் மறவர்களை உருவாக்கினார். எந்த நிலையிலும் ஒழுக்க நிலைக்கு எதிராக எமது வீரர்கள் நின்றது கிடையாது. எப்போதும் தமது […]
Read Moreசவாலான களமுனைகளின் சாதனை நாயகன் பிரிகேடியர் தீபன் தளபதி தீபன், ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தின் பல வெற்றிக்களங்களின் நாயகனாக, தாக்குதல் ஒருங்கிணைப்பாளனாக, எதிரிக்குச் சவாலாக விளங்கிய தளபதி. அந்த வீரத்தளபதியை எதிரியின் கோழைத்தனமான, வஞ்சகத் தாக்குதலில் இழந்து மூன்று வருடங்கள் ஆகின்றன. புளியங்குளம், தீச்சுவாலை, ஓயாத அலைகள் எனப் பல சமர்களில் தளபதி தீபன் அவர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறிய சிங்களப்படைக்கு தீபன் எப்போதுமே ஒரு வெல்ல முடியாத சவால். எனவே நயவஞ்சமாகத் தளபதியை வெல்லத் திட்டம் […]
Read Moreதமிழீழ விடுதலையின் வீச்சு கோபித் வைத்திலிங்கம் சந்திரபாலன் என்ற மல்லாவி பாடசாலை மாணவன் கோபித் என்கிற தமிழனாக தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டபோது அவனுக்கு வயது பதினான்கு ஆரம்ப கல்வி மட்டுமே அவன் பயின்று இருந்தாலும் அழகாக எழுதுவதிலும் படங்கள் கீறுவதிலும் அவன் வல்லவனாய் இருந்தான். இளம் மாணவனுக்குரிய குழப்படிகளும் விளையாட்டுக் குணங்களும் நிறைந்திருந்தன, அவனுடைய தந்தை யாலும் பாடசாலை ஆசிரியர்களாலும் கற்பிக்கப்பட்ட ஒழுக்கமும் பொறுப்புணர்வும் அவனுடைய செயல்களில் ஒரு நேர்த்தியை உருவாக்கி விட்டிருந்தன. […]
Read Moreதாய்மை….. அது கரும்புலிகளின் பாசறை, பயிற்சிகளும் பம்பல்களுமாக கலகலப்பாக இருக்கும் அந்தப் பாசறையில் மலர்விழியுமிருந்தாள். சண்டைக்களங்களில் உறுதிமிக்க வீராங்கனையாகத் தோன்றும் அவள் முகாமிற்கு வந்துவிட்டால் ஒரு தாயைப்போல மாறிவிடுவாள். அவளின் அந்த இயல்பிற்கு ஒரு காரணமிருந்தது. குடும்பத்தின் மூத்த பிள்ளையாக அவள் பிறந்திருந்தாள். அவளுக்கு ஒரு தம்பியும் ஒரு தங்கையும் உறவாக இருந்தார்கள். சடுதியாக அன்னையவள் இடையில் பிரிந்துபோக குடும்பத்தில் அன்னையின் பொறுப்பை அவளே சுமந்து நின்றாள். தம்பியையும் தங்கையையும் தாயைப்போல அரவணைத்து அவர்களுக்கு எல்லாமுமாக இருந்து, […]
Read Moreஉபசரிப்பு…… இவள் இப்போது தான் இயக்கத்துக்கு வந்திருந்தாள். பயிற்சிகள் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. பொறுப்பாளர் எல்லோரையும் ஒன்று கூட்டிக் கதைத்தார். தனது கதையின் ஒரு கட்டத்தில் ‘இதுக்குள்ள ஆர் கரும்புலி?” என்ற வினாவைத் தொடுத்தார். கேள்வி முடிந்த சில கணங்களுக்குள் ஒரு சிறிய உருவம் எழுந்துநின்று ‘நான்தான்” என்று கூறியது. சுதர்சினியின் தோற்றத்தைப் பார்த்து இவளா கரும்புலியாகப்போகிறாள் என்று நக்கலாகச் சிரித்தார்கள். அவள் நினைத்ததைச் சாதித்துக்கொண்டாள். கரும்புலிகளின் பயிற்சித் தளத்தில் ஆந்திராவாக அவள் உலாவிக் கொண்டிருந்தாள். அந்தச் சிறிய […]
Read Moreஉறவுகள் செதுக்கிய உறுதியின் உறைவிடம்….. சத்தியா வீரச்சாவு என்று அறிந்தபோது அதை ஏற்றுக்கொள்ளும் திடம் யாருக்கும் இருக்கவில்லை. சத்தியா… அவளை எப்படித்தான் பிரிந்திருப்பது. அன்பாய் சண்டைபோடும் அவளின் குழந்தைத் தனமான பேச்சு, சின்ன விடயங்களையே தாங்கமாட்டாமல் கசிகின்ற கண்களும் மீண்டும் மீண்டும் அவளை நினைவூட்டுவனவாகவே இருந்தன. சின்னப்பிள்ளை அல்ல கட்டையென்றுதான் அவளைச் சொல்வார்கள். அவ்வளவு உயரம் குறைவு. ஆனால் அவள் சின்னப்பிள்ளையில்லை. 06.02.1978ல் பிறந்தவள். 11ஆம் ஆண்டில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும்போது போராட்டத்தில் இணைந்துகொண்டவள். நடக்கின்றபோது அவளின் துடியாட்டமான […]
Read Moreகரும்புலி மேஜர் மலர்விழி, கரும்புலி மேஜர் ஆந்திரா, கரும்புலி கப்டன் சத்தியா வீரவணக நாள் இன்றாகும். ஓயாத அலைகள் 03 நடவடிக்கையின் போது 31.03.2000 அன்று ஆனையிறவுத் தளத்தினைக் கைப்பற்றும் சமரிற்கு வலுச்சேர்ப்பதற்காய் தாமரைக்குளப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிறிலங்கா படையினரின் ஆட்லறி தளத்தினுள் ஊடுருவி நான்கு ஆட்லறிகளைத் தகர்த்தழித்துவிட்டு வெற்றியோடு தளம் திரும்பிக்கொண்டிருந்தவேளை இடையே சிறிலங்கா இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் மலர்விழி, கரும்புலி மேஜர் ஆந்திரா, கரும்புலி கப்டன் சத்தியா […]
Read Moreவழமைக்கு மாறான செயற்பாடுகள், என்றும் இல்லாத முக மாற்றங்கள், நின்று கதைப்பதற்கோ, சிரிப்பதற்கோ நேரமில்லாது அவசரமாய் கழிந்தது பொழுது. எல்லாம் அன்று மாற்றமானதாகவே இருந்தது. ஒவ்வொரு கரும்புலி வீரரும் தன்னையும் தான் கொண்டு செல்லவேண்டிய ஆயுத வெடிப்பொருட்களையும் இறுதிநேரம் தயார்ப்படுத்துவதில் மிக மும்மரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களிற்குள் எதோ ஒரு உணர்வு திரும்ப திரும்ப அவர்களை நிறைவுபடுத்திக் கொண்டிருந்தது. அவர்களிற்காக வந்த சாப்பாட்டுப் பொட்டலங்களைக் கூட கவனிக்காது தாங்கள் கொண்டுபோகும் பொருட்களுக்கு நீர்க்காப்பு போடுவதிலும், அவற்றை சரியா என்று […]
Read Moreகப்டன் செவ்வானமும் அவளும் தோழிகள். தான் கரும்புலியாகப் போனபோது தனது குப்பியை இவளிடம்தான் செவ்வானம் கொடுத்துச் சென்றிருந்தாள். இறுதிவரை அந்தக் குப்பியை இளையவள் வைத்திருந்தாள். அவளுக்குக் குப்பி தேவையில்லைத்தான், ஆனாலும் செவ்வானத்தினுடையது என்று வைத்திருப்பதில் தோழமை………………. நட்பு……………… அந்தக் கடல்மடியில் விட்டுச்சென்ற நீங்காத நினைவுகள்…………. அவை ஓயப்போவதில்லை, ஆர்ப்பரித்துச் செல்லும் கடலைகளைப்போல. அப்போது அவள் ஓரளவுதான் நீந்துவாள். ஆழமான கடற்சுழிகள், கொந்தளிப்பு எதற்கும் எதிர்நீச்சல்போடும் திறணற்ற கற்றுக்குட்டி. நீச்சல்காரி, அன்றைய கடற்பயணம் கலகலப்பானதாக இருந்தது. ஆனாலும் கடல்நிலமை […]
Read Moreகடற்கரும்புலி மேஜர் ஜெகநாதன், கடற்கரும்புலி கப்டன் இளையவள் வீரவணக்க நாள் இன்றாகும். யாழ் மாவட்டம் காங்கேசன்துறைத் துறைமுகத்திலிருந்து திருகோணமலை துறைமுகத்தை நோக்கி 30.03.1996 அன்று ரோந்து சென்ற சிறிலங்கா கடற்படையின் கடற்கலம் கொண்ட அணியினரை யாழ் மாவட்டம் சுண்டிக்குளக் கடற்பரப்பில் வழிமறித்து சிறிலங்கா கடற்படை அணியின் அதிவேக டோறாப் பீரங்கிக் கலம் மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் ஜெகநாதன், கடற்கரும்புலி கப்டன் இளையவள் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் […]
Read Moreகடற்கரும்புலி மேஜர் காந்தன், கடற்கரும்புலி கப்டன் வாகைசூடி வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழக் கடற்பரப்பில் 29.03.2001 அன்று தவறுதலாக ஏற்பட்ட வெடிவிபத்தின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் காந்தன், கடற்கரும்புலி கப்டன் வாகைசூடி ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். || தாய்மண்ணின் விடியலின் கனவுடன் கடலன்னை மடியில் கரைந்த உயிராயுதங்கள்…. தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! “புலிகளின் […]
Read Moreஅவுஸ்ரேலியா நாட்டில் 29.03.2007 அன்று காலமான தமிழீழ விடுதலைப் புலிகளின் அவுஸ்திரேலிய கிளைப் பொறுப்பாளர் மாமனிதர் தில்லைநடராஜா ஜெயக்குமார் அவர்களின் 8ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். வீழ்ந்துபோன பெருவிருட்சம் மாமனிதர் ஜெயக்குமார் இவரைப்பற்றி அதிகம்பேர் அறிந்திருக்க மாட்டீர்கள். சாவுச் செய்தியையும் அதைத்தொடர்ந்த நிகழ்வுகளையும் தவிர்த்து இவர் பெயரைக்கூடக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். 29.03.2007 அன்று வியாழக்கிழமை அதிகாலை திரு. தில்லை ஜெயக்குமார் அவர்கள் மெல்பேணில் அவரது வீட்டில் தனது 56 ஆவது வயதில் அகால மரணமடைந்தார். […]
Read Moreதிரு. தில்லை ஜெயக்குமார் அவர்களுக்கு தமிழீழத்தின் அதியுயர் “மாமனிதர்” விருது வழங்கி கெளரவித்தார் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள். “கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக அவுஸ்திரேலியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளராகச் செயற்பட்டு, எமது போராட்டத்தின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் அரும்பாடுபட்டு அயராது உழைத்த ஒரு அற்புதமான மனிதரை நாம் இன்று இழந்துவிட்டோம். இந்த நல்ல மனிதரை இழந்து, எமது தேசம் இன்று சோகக்கடலிலே மூழ்கிக்கிடக்கிறது. திரு. தில்லை ஜெயக்குமார் அவர்கள் ஒரு பண்பான மனிதர். நெஞ்சில் தூய்மையும் நேர்மையும் […]
Read Moreதமிழீழத்தின் இதயபூமி என அழைக்கப்படும் மணலாறு மாவட்டத்தில் 29.03.2007 சிறிலங்கா இராணுவத்துடனான நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வவுனியா மடவட்ட முன்னாள் சிறப்புத் தளபதி மற்றும் மணலாறு மாவட்ட பகுதிப் பொறுப்பாளர் லெப். கேணல் தேவன் அவர்களின் 08ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும். சண்டைக்காரன் லெப். கேணல் தேவன் இரவின் இருள் சூழ்ந்த நேரம். படைக் காப்பரணில் வெளிச்சம் தெரிகின்றது. அணி நகர்ந்துகொண்டிருந்தது. அந்த அணிக்குள் தேவன் மட்டுமல்ல அவனது ஒன்றரை அகவை நிரம்பிய குழந்தை, […]
Read More“கடல்கள் தாண்டி, கண்டங்கள் கடந்து, தனது தாயகத்திற்கு வெளியே, தூரதேசத்திலே ஒருவர் எத்தனை பெரும் பணியை தனது தேச விடுதலைக்கு ஆற்ற முடியுமோ அதனைத்தான் திரு ஜெயக்குமார் அவுஸ்திரேலிய மண்ணில் புரிந்தார்.- – – – – இந்த நல்ல மனிதரை இழந்து எமது தேசம் இன்று சோகக் கடலிலே மூழ்கிக் கிடக்கின்றது.” – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள். அடி தாங்கும் உள்ளம் இது இடிதாங்குமா? என்று ஒரு பாடலின் வரிகள் […]
Read Moreமின்னல் முழக்கம் எதுவும் இன்றி விடிகாலை எம் தொலைபேசி தொனிக்க காதோரம் கேட்ட துயராறாச் செய்தி பேரிடிபோல் எம்மை வாட்டியதே தமிழீழ வண்ணார் பண்ணையை பிறப்பிடமாயும் அவுஸ்நாட்டின் மெல்பேர்ன் நகரை வதிவிடமாயும் அன்புத் துணைவியுடனும் ஆசை மகனுடனும் கால் நூற்றாண்டு காலம் களிப்புடன் வாழ்ந்தீரே உண்ணாமல் உறங்காமல் தமிழீழ உறவுகளின் உணர்வுகள் உரிமைகள் உயர்வுற உழைத்துள்ளீர் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா நாடுகளில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுக்களை அமைத்துள்ளீர் தமிழீழம் விடுதலையாகும் தாகத்தை நெஞ்சிலிருத்தி பங்காரு அன்னையின் ஆன்மீக […]
Read Moreவரலாறுகளில் வான்படை கண்ட முதல் தமிழன் நாள்! தமிழரின் விடுதலையை வென்றெடுக்கவும் தமிழரின் படைப்பலத்தில் தரைப்படை, கடற்படையோடு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரனால் மூன்றாவது படையணியாக வான்படை என்ற மூன்றாவது படையை அறிமுகப்படுத்திய நாள் இந்த நாள். இந் நாள் அதிகாலை 1.45 மணியளவில் கட்டுநாயக்கா சிங்கள வான் தளம் மீது ஒரு வெற்றிகரமான ஒரு மரபுவழி குண்டு வீச்சு தாக்குதலுடன் தமது முதலாவது வான் தாக்குதலை வெற்றிகரமாக நிகழ்த்திய நாள் இன்று…!! வான்புலிகள் […]
Read Moreவான் புலிகள் தொடரும் விமானத்தாக்குதல்கள் : புதிய பரிமாணத்தில் ஈழப்போர் விடுதலைப்புலிகள் அண்ணளவாக ஒரு மாதகால இடைவெளிக்குள் மூன்று வெற்றிகரமான விமானத்தாக்குதல்களை நடத்தியமை முழு உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது. இவற்றில் இரண்டு தாக்குதல்கள் சிறிலங்காவின் தலைநகரான கொழும்பு நகரத்தின் மையப்பகுதியில் உள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. கட்டுநாயக்கா இராணுவ விமானத்தளம் மீதான வான்புலிகளின் தாக்குதல்கள் கடந்த மார்ச் மாதம் 26ம் திகதி அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்றது. இதன்பின் வான் புலிகள் கடந்த 24ம் […]
Read Moreசிங்களத்தை உலுக்கியெடுக்கும் புலிகளின் வான் தாக்குதல்கள் குறுகிய கால இடைவெளிக்குள் மூன்று வான் தாக்குதல்க்களை வான் புலிகள் நிகழ்த்தியுள்ள்ளனர். இராணுவ மற்றும் பொருண்மிய இலக்குகளே வான் புலிகளின் தாக்குதல்களுக்குள்ளாகியுள்ளன. கட்டுநாயக்கா வான் தளமும், பலாலிப் பெருந்தளமும் சிங்க்களத்த்தின் அதியுச்ச இராணுவ இலக்குகளாகும். இவை இரண்டும் அடுத்தடுத்து வெற்றிகரமாகத் தாக்கப்பட்டுள்ளன. கொழும்பு எரிபொருள் சேமிப்புக் குதங்கள் மீதான வான் தாக்குதல்கள் சிங்களத்திற்கு பொருண்மிய நெருக்கடிகளை உண்டு பண்ணியுள்ளன. சிங்களத்தின் சுற்றுலாத்துறை பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. தமிழர்க்கெதிரான ஆக்கிரமிப்புப் போரின் […]
Read Moreதிருகோணமலையில் நாளும் துயரச் செய்தியோடு விடியும் கிராமங்களில் ஒன்றில்தான் தனுசன் பிறந்தான். நாளுக்கு நாள் சுற்றிவளைப்புக்கள், கைதுகள், சித்திரவதைகள் என்று அந்த ஊரிற்கே பழகிப்போன அவலங்கள் அது. நித்தம் ஒரு வீட்டில் ஒப்பாரி கேட்கும். சின்ன வயதில் காயங்கள் மேல் காயங்களாக அவனில் பதிந்த காட்சிகள் ஒவ்வொன்றும் மாறாத தளும்பாக என்றும் அவனின் நினைவில் இருந்தன. அந்த நினைவுகளிலிருந்து அவன் தன்னை மீட்டுக்கொள்ள முடியாதவனாய் அலைந்தான். அவன் சிந்திக்கத் தொடங்கியபோது அந்த நாட்கள் மிகக் கொடுமையானதாக இருந்தன. […]
Read Moreகரும்புலிகள் மேஜர் தனுசன், மேஜர் சுதாஜினி வீரவணக நாள் இன்றாகும். யாழ். மாவட்டம் பளைப் பகுதியில் ஓயாத அலைகள் 03 படை நடவடிக்கையின் போது 26.03.2000 அன்று சிறிலங்காப் படைகளின் ஆட்லறித் தளத்தைக் கைப்பற்றி அழித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் தனுசன், கரும்புலி மேஜர் சுதாஜினி ஆகிய கரும்புலி மாவீரர்களின் 15ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும். பளையில் 26.03.2000 நள்ளிரவு ஆட்டிலறித் தளப்பகுதி பெரும் வெடிச்சத்தங்களினால் அதிர்ந்து கொண்டிருந்தது. ஆட்டிலறிகளும் எறிகணைகளும் […]
Read Moreமுல்லை மாவட்டம் நந்திக்கடல் பகுதியில் 25.03.2009 அன்று உலக வல்லாதிக்க அரசுகளின் துணையோடு முன்னேறி வந்த சிங்கள இனவெறிப் படைகளுக்கெதிரான நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் யாழிசை அவர்களின் 06ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழத்தில் முல்லைத்தீவு மாங்குளத்தில் பிறந்த துவாரகா இவள் விளையாடித்திரிந்த வீதிகள் எங்கும் எதிரியானவனதும் – துரோக சக்திகளினது உருவங்கள் நடமாடி திரிந்தனர், ஆதலால் அவ்வூரினதும் அதனை அண்டிய கிராமங்களின் உருவே மாறியிருந்து அங்கு வாழ்ந்த மக்கள் நாளும் சிங்கள […]
Read Moreசின்னச் சிட்டுக் குருவி கலைவள்ளி சின்ன உருவம். அணிகள் ஒழுங்குபடுத்தப்பட்டு வரிசையாக நின்றால், எந்த அணிக்குள் நின்றாலும் அவள் முதலாவதாகத்தான் நிற்கவேண்டியிருக்கும். அதுவே அவளுக்குக் கவலை. தான் கட்டையாக இருக்கின்றேனே என்பதில் தன்னிரக்கம். இவர்களது அணிகளுக்குக் கனரக ஆயுதங்கள் கொடுக்கப்படும் நேரங்களில் அவளைப் பார்க்கப் பாவமாக இருக்கும். “பிப்ரியோ? அதெல்லாம் ஏன் எனக்குத் தரப்போயினம்?” என்று ஏக்கத்தோடு பார்த்தபடியே ஒதுங்கிக்கொள்வாள். வீட்டில் ஒன்பது குழந்தைகளுக்கு கலகலப்பை ஊட்ட, வீட்டுக்குள் குருவிக்கூட்டம் போலப் பாடித்திரிந்த அவளது வாழ்க்கையின் இறுதி […]
Read Moreதாயக மண்ணின் காற்றே வானதி குடும்பக்கூட்டுக்குள் வாழ்ந்த நாட்கள் மிகக்குறைவு. வீட்டின் பொருளாதார நெருக்கடி மிகுந்த நிலைமையில் அவள் பெற்றோரிடமிருந்து பிரிய நேர்ந்தது. பாடசாலையில் வெண்சிட்டாகக் கழியவேண்டிய பள்ளிப் பருவம் ஒரு வீட்டின் வேல்லையாளாக நின்ற நாட்களில் தொலைந்து போனதும், தான் நீண்ட படிப்பெல்லாம் படிக்கவேண்டும் என்ற கனவு கலைந்து போனதும் அவளுக்கு மிகுந்த கவலைதான். சிறுவயதிலேயே சுமக்கமுடியாத சுமைகளைத் தாங்கியதால் ஏற்பட்ட மனமுதிர்ச்சியும் இளமை வாழ்க்கையில் இழையோடிப்போன துன்பமும் அவளைப் பின்வந்த காலங்களில் நிமிர வைத்தன […]
Read Moreகடற்கரும்புலி மேஜர் நாவலன், கடற்கரும்புலி மேஜர் தமிழ்மாறன், கடற்கரும்புலி கப்டன் கலைவள்ளி, கடற்கரும்புலி கப்டன் வானதி வீரவணக்க நாள் இன்றாகும். முல்லை கடற்பரப்பில் 24.03.1997 அன்று சிறிலங்கா கடற்படையின் “பராக்கிரமபாகு” கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் நாவலன், கடற்கரும்புலி மேஜர் தமிழ்மாறன், கடற்கரும்புலி கப்டன் கலைவள்ளி, கடற்கரும்புலி கப்டன் வானதி ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். விடுதலைப் புலிகளின் சாலைக் கடற்படைத் தளம் மீது தாக்குதல் […]
Read Moreமுல்லை மாவட்டம் வலையர்மடம் பகுதியில் 21.03.2009 அன்று சிறிலங்கா இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் வானதி / கிருபா அவர்களின் 06ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். விடுதலைப் போராட்ட வரலாறுகளில் முதன்மையான தமிழீழ விடுதலை போராட்டமானது தன்னகத்தே பெரும் போராளிகள் மக்களின் தியாகங்களை சுமந்த வலராறுகள் நாம் அறிவோம். ஆனாலும் மறைமுக கரும்புலிகள் போராளிகளிகளின் உள்ளுணர்வுகளும் தியாகங்களும் பலரது மனங்களுள்ளே மறைந்து போகிறது ஆனாலும் அவர்களின் வாழ்வும் மண்ணிற்க்காய் தம்மை அர்ப்பணித்த […]
Read Moreவிரதம்… அவளிற்கு 22 அகவை என்று அடித்துச் சொன்னாலும் யாருமே நம்ப மாட்டார்கள். அவளது தோற்றத்திலும் செயலிலும் எப்போதும் சிறு பிள்ளையாகவேஅவள் இருந்தாள். எப்போதும் மற்றவர்களைச் சீண்டிப் பார்ப்பதிலும் சிரிக்க வைப்பதிலும்தான் பெரும்பாலான அவளது பொழுதுகள் கழியும். அந்தப் பாசறையில் எல்லோருக்கும் இளைய வளாக அவள் இருப்பதால் அவள்தான் கதாநாயகி. தன்னுடைய கடமைகளில் அவள் ஒருநாளும் பின்னிற்பதில்லை. சமையற்கூட முறை என்றால் இரவு படுக்கும் போதே அவள் சொல்லுவாள் என்ன விடியவே எழுப்பி விடுங்கோ, எனக்கு நாளைக்கு […]
Read Moreகடற்கரும்புலிகள் லெப். கேணல் அன்புமாறன், மேஜர் நிரஞ்சனி, மேஜர் கனிநிலா வீரவணக்க நாள் இன்றாகும். நாயாறு கடற்பரப்பில் 21.03.2008 அன்று சிறிலங்கா கடற்படையினரின் டோறா பீரங்கிக் கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் அன்புமாறன், கடற்கரும்புலி மேஜர் நிரஞ்சனி, கடற்கரும்புலி மேஜர் கனிநிலா ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தேசியத்தலைவர் அவர்களின் கரங்களை தமிழ்மக்கள் அனைவரும் வலுப்படுத்தி எமக்கான சுதந்திரத் தமிழீழத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள் என நாயாறு […]
Read Moreஒரு மென்மையான இதயம்….! மன்னாரில் நடக்கிற முதல் கரும்புலித் தாக்குதலை நான்தான் செய்யவேண்டும். தளபதி சுபனிடம் டாம்போ இந்த வேண்டுகோளை முன்னரே விடுவித்திருந்தான். அதனை அவருக்கு அடிக்கடி நினைவுபடுத்திக்கொண்டுமிருந்தான். சிலாபத்துறை படைத்தளம் மீதான தாக்குதல் திட்டம் தயாரிக்கப்பட்டபோது , அங்கு கரும்புலித் தாக்குதலை நிகழ்த்துவது டாம்போ எனத் தீர்மானிக்கப்பட்டது. தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்னதாக …… அந்தக் காட்டு முகாமில் உயர்ந்த மரமொன்றில் நிழலில், அதன் அடிவேரில் சாய்ந்திருந்தபடி…. நண்பனொருவனுக்கு டாம்போ தன் வீட்டுக்கதையைச் சொன்னான். “வீட்டில் நான் […]
Read More“முடிந்தளவு உள்ளே சென்று முகாமின் சுவரோட மோதுவதுதான் நோக்கம் ” மேஜர் டாம்போ 19.03.1991. “நான் திறம்பி வரமாட்டேன். என்னால முடிந்தளவு உள்ளே சென்று முகாமின் சுவரோட மோதுவதுதான் நோக்கம்.” சிலாவத்துறை இராணுவ முகாம் மீதானா தாக்குதலுக்குப் போராளிகள் தயாராகிக் கொண்டிருந்த போது தனது நண்பனொருவனிடம் டாம்போ இப்படித்தான் சொன்னான்….… அந்த இரவும் வந்தது. சிலாவத்துறை இராணுவ முகாம் மீதான தாக்குதல் ஆரம்பமானது. சில மணித்துளிகளில், உதவி அரசாங்க அதிபர் விடுதி இருந்த சிறிய இராணுவ முகாம் […]
Read Moreமன்னார் மாவட்டம் சிலாவத்துறையில் 19.03.1991 அன்று சிறிலங்கா இராணுவ முகாம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் டாம்போ அவர்களின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழத்தின் தான் பிறந்த மன்னார் மாவட்டத்தின் முதல் கரும்புலி என்ற தேசத்தின் வீர மகுடத்தை தனதாக்கிய கரும்புலி என்ற பெருமையும் இவருக்குரியதே. 1991 மூன்றாம் மாத நடுப்பகுதி:- சிலாபத்துறை இராணுவ முகாம்மீது ஒர் பாரிய தாக்குதல் நடத்துவதென தீர்மானக்கப்பட்டது. “அண்ணை, மன்னாரில நடக்கிற முதலாவது கரும்புலித் […]
Read More