கரும்புலிகள் மேஜர் தனுசன், மேஜர் சுதாஜினி வீரவணக நாள்
கரும்புலிகள் மேஜர் தனுசன், மேஜர் சுதாஜினி வீரவணக நாள் இன்றாகும்.
யாழ். மாவட்டம் பளைப் பகுதியில் ஓயாத அலைகள் 03 படை நடவடிக்கையின் போது 26.03.2000 அன்று சிறிலங்காப் படைகளின் ஆட்லறித் தளத்தைக் கைப்பற்றி அழித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் தனுசன், கரும்புலி மேஜர் சுதாஜினி ஆகிய கரும்புலி மாவீரர்களின் 15ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும்.
பளையில் 26.03.2000 நள்ளிரவு ஆட்டிலறித் தளப்பகுதி பெரும் வெடிச்சத்தங்களினால் அதிர்ந்து கொண்டிருந்தது. ஆட்டிலறிகளும் எறிகணைகளும் வெடித்துச் சிதறி எரிவது அந்த ஆட்லறித்தளம் நிர்மூலமாகி விட்ட சேதியை எடுத்துரைத்துக் கொண்டிருந்தது. வான் வெளியில் பரவிக் கொண்டிருந்த தீச்சுவாலைகளின் பிரகாசம் கரும்புலிகளின் வீரத்தையும் தியாகத்தையும் வானத்தில் பிரதிபலிக்கும்படி செய்து கொண்டிருந்தன. அந்த வீரமிகு சாதனையை நிகழ்த்தி விட்டு காவியமாகினர் இரண்டு கருவேங்கைகள்.
|| தாய்மண்ணின் விடியலுக்காக வெற்றிக்கு வித்திட்டு புயலான தேசப்புயல்கள்……
கரும்புலி மாவீரர்களின் நினைவாய்………
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”