லெப். கேணல் நீலன் வீரவணக்க நாள்
மட்டு – அம்மாறை மாவட்ட புலனாய்வுத்துறை துணைப் பொறுப்பாளர் லெப். கேணல் நீலன் வீரவணக்க நாள் இன்றாகும்.
தென் தமிழீழத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணாவின் துரோகத்தனத்தால் துரோகிகள் மேற்கொண்ட தீய செயல்களால் 12.04.2004 அன்று துரோகி கருணாவால் சுட்டபட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட புலனாய்வுத்துறை துணைப் பொறுப்பாளர் லெப். கேணல் நீலன் உட்பட ஏனைய போராளிகளின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
துரோகம் சூழ்ந்து நின்ற போதும் தமிழீழ விடியலின் தணியாத தாகத்துடன் விழிமடடல் மூடிய மாவீரன்…………………….
ஆரையம்பதி மண்ணில் அவதரித்த நீலன்
ஆரையும் பகைக்காது அரவணைத்த நீலன்
வேரையே நம்பி நின்று விழுதான நீலன்
வீணரின் விருப்புக்கு விலை போகா நீலன்
ஆறும் அலைகடலும் அணையாகி நிற்கும்
ஆரையம்பதி மண்ணின் அசல்வீரன் நீ
நீறாகிப்; போனாலும் நிறைகாப்பேன் என்று
நீசர்க்கு வணங்காது நின்றுயிரை மாய்த்தான்
ஆளும் சிங்களமும் அயல்நாட்டார் அரசும்
ஆளார் இன்னென்று அலசித் தோற்றிருக்க
நாளும் பொழுதும் நாட்டுக்காய் உழைத்தவனை
நரிகள் சதிசெய்து நாசம் புரிந்ததுவே
தேனும் மீனும் தேட்டமுடை மண்ணாம்
தென்தமிழீழத்தின் தேச ஒளிர் விழக்காய்
தீனும் பொருளும் திருவென் றெண்ணாத
தீபம் தனையந்த தீயர் அணைத்தாரோ
கட்சி மாறென்ற கயமைக்கு மறுத்ததனால்
கையை முறித்தார்கள் காணார் பயனதனால்
பட்டினி கிடத்தி பதைக்க வைத்தார்கள்
பயந்தாய் அல்லன் நீ பலியாய் போனாயோ!
பெருமை சேர் தலைவன் பிரபாகரன் அண்ணன்
பிரபா அருமை அறிந்தாய் நீ அதனாற் சிறந்தாய் நீ
கருமை எல்லாம் கஸ்தூரி ஆகிடுமோ
எருமைகள் அறிந்திடுமா ஏந்தல் இவன் மகிமை
தலைவன் அவன் மட்டே தனி ஆள் வேறில்லை
மலையாம் அவன் முன்னே மண்ணாங்கட்டிக்கு
தலையான் சாய்ப்பேனோ தவறேன் என்கின்ற
நிலையாம் இலக்கோடு நின்றே உயிர் நீத்தாய்
வளர்த்த மாட்டுக்கு வந்தது ஒர் ஆசை
வளர்த்தோன் றனைக்குதறி வளயா உனில் அதனில்
வாலாட்டம் சொல்லாது விலையாய்ப்போகாத
வீரன் நினைக்கொன்றார்
கட்டியவள் பொட்டிழந்தாள் கன்றுகளும் நினையிழந்தார்
நட்டமது நினைச்சூழ்ந்த நால்வருக்கு மட்டுமல்ல
நாட்டுக்கே இழப்பாகும் நம் போர்க்கும் இழப்பாகும்.
நீலன் நினைவே நினைவாகி………
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”