தமிழீழத் தேசியத் தலைவா நீ வாழிய வாழியவே!
தேச விடுதலை என்ற உயரிய இலட்சியப் பற்றுடனும் பிரசவிக்கத் துடிக்கும் தமிழீழத் தாயின் வேதனைகளையும், ஏக்கங்களையும் தன்னகத்தே சுமந்துகொண்டும் தமிழீழத்தின் விடுதலைப் போரை முன்னெடுத்துச் செல்லும் எமது தேசியத் தலைவர் இன்று தனது 61வது அகவையில் காலடி வைக்கிறார். பெரும் நெருப்பாறுகளைக் கடந்து எமது இனத்தை வழிநடத்திச் செல்லும் தமிழீழத் தேசியத் தலைவருக்கு ஆவணக் காற்றாகிய தேசக்காற்று இணையம் தனது பிறந்ததின நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறது.
அடிமைத்தளைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு விடுதலை பெறத்துடிக்கும் மானிடத்தின் வரலாறாக இவ்வுலகின் வரலாற்றியக்கம் அசைந்து செல்கிறது. இவ் வரலாற்றுப் போக்கில் பல இனங்கள் தமது தாயக நிலங்களில் தமது இருப்பை உறுதிப்படுத்தி உலக அரங்கில் கௌரவத்துடன் தலைநிமிர்ந்து நின்றன. இன்று தமிழீழ மண்ணில் எமது இனத்தின் இருப்பும் உலக அரங்கில் எமது அடையாளமும் நிலைநிறுத்தப்படுவதற்குக் காரணமாக இருப்பது எமது தேசியத் தலைவரின் தீர்க்கமான வழிகாட்டலும், எதற்கும் தளராத அடிபணிந்து போகாத அவரின் இலட்சியப் பற்றுறுதியுமே ஆகும்.
எமது இனத்துக்கு கிடைத்தவோர் பெரும் பேறாக, ஓர் வரலாற்றுச் சந்தர்ப்பமாக எமது தேசியத் தலைவரின் காலம் எம் கண் முன்னே இன்று விரிந்து செல்கிறது. ஓர் இனத்தின் விடுதலை என்ற ஓர் பெரும் வரலாற்றுக் கடமையை தன்மீது சுமந்து எமதினத்தை வழிநடத்திச் செல்லும் எமது தேசியத் தலைவர் அவர்களுக்கு மீண்டும் எமது இதயங்களிலிருந்து அன்புகனிந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமிதமும் பூரிப்புமடைகிறோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
நிர்வாகம்,
தேசக்காற்று.
தமிழீழம்.
தளபதிகள், போராளிகள், உணர்வாளர்களின் சிந்தனையில் தமிழீழத் தேசியத் தலைவர்……….
தமிழீழத் தேசியத் தலைவர் பிறந்தநாள் வாழ்த்துக் கவிதைகள்…………..
தமிழீழத் தேசியத் தலைவர் புகழ் பாடும் இசைமாலைகள்……….
விடுதலைச் சுடரை விழிகளில் ஏந்தி, வீர வரலாறு படைத்துக்கொண்டிருக்கும் தமிழீழத் தேசியத் தலைவரிற்கு எமது உள்ளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”