விதி மாற்றி எழுவான் பிரபாகரன் நாளை
அழகினிற்கு ஓவிய நிலவு,
வையகம் முற்றாள வல்லான்!
உளத்தினிற் பரிவு, வான
உச்சியை உரசும் நெடியோன்
பழகிடத் தோன்றும், தலைவன்
தாயகம் நோக்கும் எழுவான்!
நிழலினில் நிற்கும் தமிழர்
நினைத்தவா றடைவான் வெற்றி!
விழிகள் இரண்டிலு மாயிரம்
ஆற்றல்கள் குவியும், அண்ணன்
மொழியும் போதினில் உள்ளம்
காதலால் உருகும், எம்மைப்
புலிகளாய் ஆக்கிய தலைவனால்
பூமியே விடியும், அடடா,
எலிகளாய் எம்மில் ஏறிட
இங்கினி எவரால் முடியும்?
அமைதியை ஆக்கி உலகின்
ஆசிகள் பெற்றாய் கோடி
சமாதானக் காற்றெம் மேனி
தழுவிடச் செய்தாய் வாழி.
இமையுள் ஒளியே, தமிழர்
இருள்களைந் திட்டாய் சோதி
அமைகதாய் நாடே, தர்மம்
ஆசையோ டளிக்கும் நீதி!
வெண்புறா காலம் தன்னை
விரும்பியே அழைத்தான், யாரும்
புண்படா வாறே களத்திலும்
பொறுமைகள் காத்தான் இன்றோ
எண்டிசை உலகும் மெச்சும்
பண்பாளன் தலைவன் ஈழ
மண்விதி மாற்றி நாளை
மணிமுடி தரிப்பான் வாழி.
– கவிஞர். வேலணையூர் சுரேஷ்
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”