தலைவா வாழ்க
ஓயாதா அலைகள் ஓயவில்லை
ஒருபோதும் அது உறங்கவில்லை
சாகாத பலம் தமிழனுக்கு உண்டு
தரணியை மீட்கும் கடமையும் உண்டு
போரினை நடத்தும் தலைவா வாழ்க
வெற்றியின் மாலை உன் மேனியில் வாழ்க
ஈழத்தைச் சுமக்கும் மன்னனே வாழ்க
முத்தமிழ் காத்த தலைவனே வாழ்க
வெண்ணிலவு உனைச் சேர்ந்ததைய்யா
வெற்றியும் உனைச் சூழ்ந்ததைய்யா
ஈழ மண்ணும் உன்னை வாழ்த்துமைய்யா
எம்மவன் என்று உனைப் போற்றுமைய்யா
ஈழத்துத் தேவனே நீ வாழ்க
உன்னை ஈன்ற மண்ணும் சேர்ந்து வாழ்க.
– நீர்வைக்குமார்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”