தாலம் போல் என்றென்றும் தலை நிமிர்ந்து நீ வாழி !
காலம் எமக்களித்த கற்பகமாய் வந்துதித்த
ஞாலம் போற்றும் நம் தலைவர் வாழி
ஆழம் கழுத்தில் அணிந்தோர் படையமைத் தெம்
அல்லல்கள் தீர்க்க வந்த அண்ணலே நீ வாழி.
உள்ளத்தில் உறுதியும் உயர்வான தமிழ்ப் பற்றும்
எண்ணத்தில் தமிழர் உயர்வே நினைவாய்க் கொண்டு
அல்லும் பகலும் அயராது உழைக்கின்ற
நல்லவனே தமிழர் நாயகனே நீ வாழி.
தூய மனத்தவனே, துயர் போக்க வந்தவனே, யெம்
தாயகம் அமைக்க வந்த தலைவனே நீ வாழி
பாயும் புலிப்படையால் எம் பகைவர் தனை ஒழித்த
பைந்தமிழ் காவலனே பல்லாண்டு நீ வாழி.
நாதியற்று நின்ற நம்மவரின் நிலைகண்டு
சாதிமத பேதமின்றி எம் சதிகாரரை அழித்து
நீதியுள்ள அரசமைத்து நிம்மதியாய் நாம் வாழ
மேதினியில் உழைத்துவரும் மேலவனே நீ வாழி.
வரலாற்று நாயகனே வரலாற்றைப் படைத்தவனே
மறத்தமிழர் துயர் போக்க எம் மண்ணில் உதித்தவனே
தன்மானம் கொண்டு எம் மானம் காத்தவனே
தாலம் போலென்றும் தலைநிமிர்ந்து நீ வாழி.
– கீழ்க்கரவைச் சிவனேசன்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”