மாவீரர் நாள்
ஆண்டாண்டு தோறும் ஆழுதுபுரண்டாலும் (2)
மாண்டார் வருவாரோ இம் மானிலத்தில்
சாதார மானிடர்கள் வரமாட்டார்கள் (2)
ஆனால் எமக்காக உயிர் நீத்த
எம் உடன் பிறப்புக்கள்
அழியாத மாவீரர்கள் வருவார்கள்
மே 18 இல் துயர் தோய்ந்த
அந்த நாட்கள் எம் நெஞ்சில்
என்றும் மறையாது ஓயாது
மாவீரர்களே உங்கள் தியாகங்கள்
உலக வரைபடத்தில், நிச்சயம்
பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் (2)
தனக்காக வாழாமல்
தமிழுக்காய் வாழ்ந்தவர்கள் எங்கள் மாவீரர்கள்
ஆண்டபரம்பரை நாம்
ஆடிமையாய் வாழ்வதா? என
வீறு கொண்டு எழுந்து
மண் மீட்புக்காய் போராடிய
எம் மாவீரர்களே உங்களுக்கு
எம் கண்ணீர் அஞ்சலிகள்.
உலகமே வியந்து போற்ற (2)
உரிமையை மீட்டு எடுக்க
உயிரை துச்சமென எண்ணி
எமக்காக சிலுவை சுமந்த
தீயாகிகளே, மாவீரர்களே (2)
தியாகங்கள் என்றும் வீணாவதில்லை
தமிழன் விழப்பிறந்தவன் அல்ல
விழ விழ எழப்பிறந்தவன் (2)
முள்ளி வாய்க்கால் தழும்புகள்
புலம் பெயர்ந்து வாழும்
ஏம் இதயத்திலும் மாறாத
வடுவாய், ஆறாத ரணமாய் ஆழப்பதிந்துள்ளது
எமக்காக உயிர் நீத்த உங்களுக்கு
எமது கண்ணீர் துளிகள் காணிக்கையாக
மாபெரும் தலைவனின் வழிநடந்து
வெற்றிகள் ஈட்டி
உலகமே வியந்து போற்ற
நாம் அடைந்த மகிழ்ச்சி
இதோ எங்கள் சுதந்திர திருநாள்
கொண்டாட ஆசையுடன்
காத்திருந்த வேளைதனில்
நரிகளை பரிகள் ஆக்கியது போல்
புலிகளை, எலிகளாக்கி, தந்திரம் செய்து
எம் கனவுகள் சிதைத்து போயின
பாவிகளாய். நாடு நாடாகாக அலைகின்றோம்
பஞ்சபாண்டவர்கள் அரசாழ
நாடு கேட்டனர் நாமோ
பேசுவதற்கு உரிமை தானே கேட்டோம்
நாங்கள் பயங்கர வாதிகளா ?
நாங்கள் பிரிவினை வாதிகளா?
பொய்யுரைத்தது அரசு
நம்பியது உலகம்
விதியா ? இது அல்லது எமக்கு இது சாபமா?
ஆயிரம் ஆயிரமாயிரம் கேள்விகள்
எம்நெஞ்சை துளைக்கின்றன (2)
எம்மிடையே ஒற்றுமை இல்லை
இதுவும் காரணமாய் இருக்கலாமோ?
எண்ணெற்ற எம் உறவுகளை
தேடுகின்றோம் காணவில்லை
தமிழன் மானம் காக்க, மொழி காக்க
போராடிய எம் உறவுகளான
தியாகிகளை தேடுகின்றோம்
எம்கனவு நினைவாகும் நாள் வரும்
எம்மைப் பிரிந்த எம் மாவீரர்களுக்கு
மலர் தூவி அஞ்சலி செலுத்தி வணங்குகின்றோம்.
– புலத்திலிருந்து ஓர் இளந்தளிர்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”