” சகோதரி நினைவில் … “
வைகாசி ( மே ) மாதம் பிறந்தால்
உள்ளுணர்வு பகையை எரிக்கும்
நெஞ்சுரத்தில் குமுறுகின்றது
ஆயினும் சில சுயநலங்களும்
பூமிப்பந்தில் விழ்ந்தும் – எழுந்துமாய்
அவ்வப்போது ஈழத்தின் நாமம் உரைத்தபடி …..
நெஞ்சினில் தாயக நினைவுகள்
சுமந்து மக்களின் அவலத்தை
ஊடகத்தில் ஓர் குரலாய் ஒலித்தாய்
வஞ்சகத்தினரின் செயலால் இன்று
சனல் 4 ஊடகதிநூடாய் காற்றலையில்
தவழ்ந்தது உன் கதையும்
ஈழத்தாயின் பிள்ளைகளின் கதையும் ….
என் போன்று பல இசைப்பிரியாவின்
வாழ்வு எம் மண்ணிலே புதைக்கப்பட்டது
அப்பா – அம்மா – அண்ணா – அக்கா –
தம்பியரே – தங்கையரே இன்னுமா
நீங்கள் விழித்துக் கொள்ளவில்லை
என இந்த மேமாதம் தமிழினத்தின்
இதயத்தில் ஆயிரம் ஆயிரம்
நினைவுகளுடன் ஓங்கி ஆராத்துயராய்
வருடித்தான் செல்கின்றது ….
யாரும் நமக்கில்லை ….
ஆயிரம் தாலைவன் முளைத்திருக்கலாம்
2009 பின் பல வகை வகையா படத்துடன்
ஆனால் எவன் கட்டளை அதிர
யுத்தத்தில் முழங்க்கினோமோ
எவனைக் கண்டு பகை அஞ்சினானோ
எவன் பின் ஆயிரம் ஆயிரம் வேங்கைகள்
அணிவகுத்து சென்றார்களோ – அவன்
வருவான் ….. வருவான் ….. வருவான்
அவன் வரவே விடியல் ஒன்று !
– தமிழீழப் பறவை கனடாவில் ….