செய்திசொன்னவள் செய்தியாகிறாள்….
செய்திசொன்னவள் செய்தியாகிறாள்(இசைப்பிரியா)
சேனைகாத்தவன் ஈனப்படுகிறான்( ரமேஸ்)
மானங்காத்த தம் துணிமணியுமின்றியே
மண்ணின் மைந்தர்கள் மரணமாகின்றார்
கையில்சுடுகுழலுடன் காடையன் நிற்கின்று
கன்னித்தமிழனை சுட்டுக்கொல்கிறான்.
கண்களை மட்டுமா கட்டிச்சுடுகிறார்?
காலால்உதைய நாயா தமிழினம்?
பெண்ணின் பெருமையறியா மிருகங்கள்
பெண்மை தின்றபின் பிரதமாக்கவோ?
உண்மைஉறங்காதென்பதுண்மையே
உலகம் இனியேனும் கண்ணைவிழிக்குமா?
அண்ணன்தம்பியாய் வாழசொல்பவர்-தம்
அயலாய் ஏற்கவும் விருப்பம் கொள்வரோ?
எண்ணம்இன்னும்தான் எம்மைஅழித்திடில்……சிறையினில்….
எறும்பைப்போலுமை நசுக்கிட எம்மைந்தர்கள்
எழுந்துவருவாராரோ ஆவிகளாகவே.
மிருகத்தின் ரத்தத்தின்உற்பத்தியானவன்
உருவத்தில்கூட இன்னும் மாற்றமில்லாதவன்
பருவத்தை பண்பையறிவனோ வாழ்வினில்?
பாழ்பட்ட பரம்பரை ஊழ்தொட்டுஅழிந்திட
ஆள்கின்ற ஆண்டவனே ஆழியாய் வாராயோ?
வீழ்கின்ற இனமாக எம்மைஆக்கிட நினைக்கையில்….
விடுதலைமறந்து தமிழன்வாழ்வனோ?
கூழுக்கும் வழியில்லா குடியில் வாழ்ந்தவன் கையில்
கோலினைக் கொடுத்ததால் வந்ததே இக்கொடுமைகள்
வாழுடன் சிங்கத்தை கொண்டு ஆளவந்தவன்
வதைப்பனோ வாழவைப்பனோ உலகே தெரிந்துகொள்.
– கவிவன்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”