” தோல்வியில் மீளுவோம் “
நீண்ட பயணம்….,
முடிவு வரும் ஆனால் பாதை
கடினமானது.
தெரிந்து பயணம் செய்தான்
எங்கள் தலைவன்.
வெற்றிகள் வந்தது தோல்விளும் கூடவே….!
பயணத்தின் பாதை
அது மிகக் கொடுமையானதாய்
கொத்துக் கொத்தாய் விலை கொடுத்தோம் …..!
சென்னீரும் கண்ணீரும் சேர்வையாய்
குருதியாற்றில் குளிர்தோடிய பயணம்
அது முடியும் தருவாயில்…..!
இதோ கனவின் கடைசித்துளி
நிசமாகியதாய் நினைவு.
நாங்கள் வென்றோம்…..!
பாதியில் பயங்கரக்கனவு போல்
பறிபோன கனவின் மீதமாய்
தோற்றுப் போனோம்….!
பயணம் முடியாமல் தோல்வியாய்
பயணவழி வந்தவர்கள்
பயணம் முடியாமல் பாழ் சிறைகளிலும்
பயங்கர அறைகளிலும்…..!
எனினும் எல்லைகளை எட்டும்வரை
பயணத்தில் தங்கள் பாதையை தெரிந்த
சிலர் மட்டுமே வந்தவழி நடக்க
வரலாற்றைச் சுமந்தபடி….!
பாதிவழி முடியாத
பயணத்தை முடித்துவைக்க
பார்த்திபன்கள் பயணிக்கத் தொடங்கியுள்ளார்…..!
இலட்சிய வேர்களின் உறுதியில்
மீளுவோம் மீண்டும் எழுவோம் என்ற உறுதி
எழுதப்படும் வரலாறாய் தொடர்கிறது உறுதியுடன்….!
காலநதியோடு கரை(லை)ந்திடாமல்
காலச்சூரிய ஒளிதேடிய கடைசி யாத்திரை
மீளும் உறுதியோடு…..!
காலத்தை மாற்ற புறப்பட்ட போராளி நினைவாக !
– நிக்சன் –