தமிழ் மகளே தமிழினி…
தமிழ் மகளே தமிழினி,
நீ மௌனித்து விட்டாய்
வாடி போன ஈழ மறவர்
வரிசையில் மீழாத்
துயிலில் நீயும் உறங்கி போனாய்
ஊர் முழுக்க உன் நாமம் சுமந்து
ஊடக செய்தியாகிவிட்டாய்
மரணம் கூட உன் முன்னால்
மண்டி இட்டது அன்று
நீ பார்க்கும் திசையில் மழை
மேகம் கூடாமலே இடி இடிக்கும்
உன் உணர்வுகளாய் எழும்
வாயொலியால் புயல் அடிக்கும்
நீ பதித்த பாத சுவடுகளில் அன்று
எதிரிக்கு குலை நடுங்கும்
உன் விரல் சுட்டலில்
சர்வ உலகும் அடங்கி நிற்கும்
தேசத்தலைவன் வளர்த்த
கார்த்திகை பூவே நீ
தேடிய ஈழம் காண முன்பே
வாடி போனது எதற்காக அன்பே ?
திலீபனின் புரட்சி பூ நீ
மாலதி தடம் பதித்த
வீர பெண்ணணியின்
அரசியல் முதல்வி நீ
களத்தை கண்டு கலங்கிட நாமெல்லாம்
ஈழ கிழக்கு வெளிக்க நீ எழுந்தாய்
அஞ்சா நெஞ்சம் கொண்ட வளே
வஞ்சகரால் மாண்டாயோ இன்று
உரைத்திட வார்த்தை இல்லா
இழிநிலையை நாமடைய
கொதி நிலையில் எழுந்தவளே
புற்றுநோயால் வீழ்ந்தாயோ இன்று
நஞ்சை நெஞ்சில் கொண்டே
வீர மறத்தியாய் பயணித்தாய்
விஞ்சிய ஆற்றலது கொண்டு
பஞ்சாய் படையை சிதறடித்தாய்
காலம் தந்த நிலை உன்
புலி கோலமது மாறி நின்று
சிறைக் கூடுக்குள்ளே
அடைபட்ட கைதியானாய்
புனர்வாழ்வு உனக்கு
புற்று நோய் தந்ததுவோ
பாரதி கண்ட புதுமையே நீ சிங்களதின்
வஞ்சகத்தால் சாய்ந்தாயோ
வணங்குகிறேன் தமிழ் மகளே
புலிக்கொடி போர்க்கவில்லை
விதைகுழியும் இன்று உனக்கு இல்லை
துயில வீரர் இல்லத்திலும் இடமுமில்லை
ஆனாலும் துயில் மகளே
எங்கள் மனங்களில் என்றும் நீ
எதிரியின் கால் நடுங்க வைத்த
கம்பீர தமிழினியே……
கவியாக்கம்:- கவிமகன்.இ (18.10.2015)
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”