புதிய ஒளி பாயட்டும்!
நெஞ்சைப் பேரேட்டில்
நீட்டிய
அச்சுக் கோர்வையின்
கண்ணீர்த் தழும்புகள்
கரையாமல் எரிகிறது………
உண்மைக் கலசங்கள்
உறியில்
உருகிச் சாய்கிறது…
வாசல் கோலங்கள்
விகாரமாய் அழுகிறது……..
வேர்வையினாலேயே
உலகத்தை
விதவிதமாய்ச் சமைத்தால்…
அது
கஞ்சியாய் வடிகிறது………
தலையணைகள் வேண்டாம்
இரத்தம்
தலைக்கேறுவதில்லை…
கட்டாந்தரையில்
கல்லுக்குள்ளும் படுப்போம்….!
சாம்ராஜ்யக் குதிரை
இரும்பு லாடத்தைத் தான்
மிதித்து நடக்கும்….
சரித்திரம் அதுதான்……
கதவுக்கு தாழ்பாள்
எதற்கு?
திறந்த வெளிக் கூட்டில்
எச்சில் இடாதீர்கள்…..
ஆந்தை மிளிறல்
அடியோடு தொலையட்டும்
வானம்பாடி
ஆனை ஏறட்டும் !
பசுக் கூட்டம்
வண்டியை இழுக்கலாமா….!
புலியை இழுத்து வாருங்கள்
புதிய பாதையில்
பூட்டி ஓடுங்கள்
திமிங்கலத்தை
சாட்டை ஆக்குங்கள் ….
புதிய ஒளி பாயட்டும்….!
பூர்வீக ஜபர்தஸ்தா
புழுதி மண்ணாகட்டும் !
கவியாக்கம்:- மருத்துவர் மா. நடராசன். (ஐப்பசி 1993)
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”