விடுதலை சுடர் பாடல்……
ஜெர்மன் இளையவர்களால் உருவாக்கப்பட்டுள்ள விடுதலை சுடர் பாடல்
மனித உரிமைகள் மறுக்கப்பட்டு,இறுதிப்போர் என்ற பெயரில் நடைபெற்று முடிந்த தமிழின கருவறுப்புக்களை எதிர்வரும் 16 ஆம் திகதி ஐநா முன்றலில் உரக்க கூறி எங்கள் உரிமைகளை அடைய அனைவரும் ஒன்றிணைய வேண்டிய இந்த நேரத்தில் தமிழர்களின் ஒன்றினைவுக்கு வலு சேர்க்கும் வகையில் ஜேர்மனிய புலம் பெயர் தமிழ் உறவுகளால் விடுதலை சுடர் இசை பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த இசைப்பாடல் கவிமகன்.இ அவர்களின் வார்த்தை கோர்ப்புக்களில் உருவாக்கம் கண்டு தினா திரேஸ்ரன் கரு அவர்களினால் இசைக்கலவை செய்யப்பட்டு வசந்த் செல்லத்துரை, அர்ச்சனா செல்லத்துரை , ஒலிவியா T, ஆகியோரின் உன்னதமான குரலின் அசைவுகள் தாங்கி வெளிவந்துள்ளது.
பாடல் வரிகள் : கவிமகன் . இ.
இசையமைப்பாளர் : தினா திரேஸ்ரன் கரு {Tonebird studios}
பாடியோர் : வசந்த் செல்லத்துரை, அர்ச்சனா செல்லத்துரை , ஒலிவியா T,
படக்கலவை : திலக் ஜெயரட்ணம்
தயாரிப்பு : Ethnotone, Tamil Just
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”