லெப். கேணல் மறவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்
தமிழீழ விடியலின் கனவுகளுடன் இதே நாட்களில் சிறிலங்க இராணுவத்துடனான வெவ்வேறு தாக்குதல் சம்பவங்களின் மற்றும் ஏனைய சம்மவத்திலும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்புலிகளின் மூத்த உறுப்பினர் லெப். கேணல் மறவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
|| வெற்றிக்கு வித்திட்டு கல்லைறையில் உறங்கும் மாவீரச்செல்வங்கள்…..
மன்னார் மாவட்டம் நகர்ப் பகுதியில் 11.12.1998 அன்று எதிர்பாராத விதமாக சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட புலனாய்வுத்துறை முன்னணிச் செயற்பாட்டாளர் மேஜர் வில்வம் / ஜோன் ஆகிய மாவீரரின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
வவுனியா மாவட்டம் மரகாரன்பிலவு பகுதியில் 11.12.2000 அன்று சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் சிவதர்சன் ஆகிய மாவீரரின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
திருகோணமலை மாவட்டம் பாலைத்தோப்பூர் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படை புலனாய்வுப்பிரிவு முகாம் மீது 11.12.2001 அன்று நடாத்தப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப். கேணல் மனோஜ், மேஜர் குமாரவேல், லெப். கலைமதி, 2ம் லெப்.தேவன் ஆகிய மாவீரர்களின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை செற்றடி காவல்துறை நிலையம் மற்றும் படை முகாம் மீது 11.12.2001 அன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கப்டன் சற்குணராஜ் உட்பட ஏனைய (10) மாவீரகளின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
கப்டன் சற்குணராஜ் (தம்பிப்பிள்ளை மதியழகன் – மத்தியமுகாம், அம்பாறை)
கப்டன் பிரதாவரன் (இராசையா சற்குணம் – மல்வத்தை 2, அம்பாறை)
கப்டன் மணிராஜ் (சிங்காரவேல் கமலேந்திரராசா – வாகரை, மட்டக்களப்பு)
லெப்.மணியரசன் (குமாரசூரியம் ரவிச்சந்திரன் – சித்தாண்டி, மட்டக்களப்பு)
லெப். முகுந்தன் (நடராசா யோகேஸ்வரன் – விநாயகபுரம், அம்பாறை)
2ம் லெப். உமாகரன் (சிவசம்பு சசிக்குமார் – கரடியனாறு, மட்டக்களப்பு)
2ம் லெப். வினோகரன் (சதாசிவம் சௌந்தராஜன் – நெடியமடு, மட்டக்களப்பு)
2ம் லெப். மணிகண்ணன் (கணேஸ் சண்முகநாதன் – சந்திவெளி, மட்டக்களப்பு)
2ம் லெப். முகுந்தனன் (அழகப்பொடி ஜெயகாந்தன் – புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு)
2ம் லெப். மணிப்பிறை மகேந்திரன் மகேஸ்வரன் – கரடியனாறு, மட்டக்களப்பு)
முல்லைத்தீவு மாவட்டத்தில் 11.12.2004 அன்று சுகையீனம் காரணமாக சாவினைத் தழுவிக்கொண்ட கடற்புலி மூத்த உறுப்பினரும் / கடற்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளருமான லெப். கேணல் மறவன் மாஸ்ரர் ஆகிய மாவீரரின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
உடுத்துறை, வடமராட்சி மாவீரர் துயிலுமில்லத்தில் விதைத்த முதல் வித்து லெப். கேணல் இவரே ஆவார்.
நீளும் நினைவுகளாகி………..
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”