தாய்மண் நேசிப்புக்கு….
நேற்றுவரை
பாட்டி மடியில் கதை கேட்டவ(ன்)ள்
பாட்டிக்கு ஒரு வரலாறு சொல்கிறாள்
வானத்தைக் காட்டிக்சொன்ன தேவதைகளால்
வளைந்த முதுகை நிமிர்ந்த
இவள் மண்ணையும் மக்களையும் காட்டி
புதுக்கதை சொல்கிறாள்.
தவழ்ந்து ஓடி விளையாடிய வீடு
தன் கையால் மண் அளைந்த வாசல்
தாய்மண் நேசிப்புக்கு மூல அச்சாரம்.
வெற்றிலை உரலோடு விளையாடியவள்
இன்று களத்தில் எதிரியோடு
கையில் புதிய ஆயுத்தத்தோடு.
இப்போராளிகள் தண்ணீர் ஊரறிய தென்னையும்
செந்நீர் ஊற்றிய தேசமும்
நாளை வரைந்து நிமிரும்.
– புலத்திலிருந்து ஓர் இளந்தளிர்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”