அடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்
இன ஒழிப்பின் விளிம்பில், நாம் தள்ளப்பட்டும் எமக்கு இன்னும் விடுதலைக்கான விழிபுணர்ச்சியோ, வீராவேச உணர்ச்சியோ தோன்றவில்லை. பசியும் பஞ்சமுமாக தாங்கொணாத் துன்பங்கள் ஏற்பட்டும் நாம் இன்னும் போராடத் தயாராகவில்லை.
இனியும் நாம் பயந்து, பயந்து ஒழிந்து செத்துக்கொண்டிருப்பதில் அர்த்தமே இல்லை. ஏதோ எங்கிருந்தோ எமக்குப் புறம்பான சக்திகள் கைகோர்த்து உதவும் என்று காத்துக்கொண்டிருப்பது அசட்டைத்தனம். நாம் போருக்குத் தயாராக வேண்டும். அடிமைகளாக வீழ்வதை விடப் போராடி வாழ்வதே மேன்மையானது என்ற இலட்சிய உணர்வோடு நாம் ஆயுதம் ஏந்தத் தயாராக வேண்டும். ஈழத்தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் விடுதலை வேங்கைகளாக, வீரப்புலிகளாக மாறவேண்டும். தாழ்ந்துபோன தமிழ் இனம் வீரப்புலி இனமாக மாறவேண்டும்.
விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிபுண்டு. இந்த நெருக்கடியான காலகட்டத்தில், முழுச் சமுதாயமுமே பேரழிவை எதிர்நோக்கிய இச் சூழ்நிலையில், எம்மத்தியில் சுயநல உணர்வுகள் களையப்பெற்று சமூக உணர்வு பிறப்பிக்க வேண்டும். பணத்தை முடக்காமல், உணவுப் பண்டங்களைப் பாதுகாக்காமல், தான் வாழ்ந்தால் போதும் என்று தன்னலங்கருதாமல் வசதி படைத்தோர் வசதியற்றோருக்கு உதவவேண்டும். பணம் படைத்தோர் பட்டணி கிடப்பவர்களுக்கு உதவ வேண்டும். இது ஒரு தேசிய நெருக்கடி. இந்நெருக்கடியால் பிறக்கும் துன்பத்தை முழுத்தேசிய இனமுமே பகிர்ந்து கொள்ளல் வேண்டும்.
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.
எரிமலை (கார்த்திகை – மார்கழி 1997) இதழிலிருந்து தேசக்காற்ற.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”