உங்களுடன்………..
உங்களுடன்………..
போகிறேன்
களம் நோக்கி…
சில வேளைகளில்…
என் மூச்சுக்களும்
சுட்டுப் பொசுக்கும்
சிவந்த கண்களும்
சிதறி வெடிக்கும்
உடைகளும்
என்
இறுதி வார்த்தைகளும்
உங்களுக்குக் கிடைக்காமல்
போகலாம்
ஆனால் நாளை…
சுதந்திரத்தின் பிரசவிப்பில்
உங்கள் முற்றத்தில்
மலராய்
நான் மலர்வேன்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”