
நீங்கள் களத்தில் மடியும்
கடைசி நேரத்தில்
என்ன நினைத்தீர்கள் ?
அந்த நினைவைச்
சுமக்கின்றோம்.
அதனை நிச்சயம்
முடிக்கின்றோம்,
நீங்கள் புதைந்த இடத்தில்
புல்லா முளைக்கிறது?
இல்லையே!
போராடும் எங்களுக்கு
புதுவீரமல்லவா பிறக்கிறது
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”