எங்கள் தேசத்து நிஜங்கள்
எங்கள் தேசம்
செந்தணலாய் எரிகிறது!
என்றும் போலவே
இரத்தமும் கண்ணீரும்.
எரிமலையாக குமுறும்
எங்களின் நெஞ்சங்கள்
இனி,
புதிய விடுதலைக்கு
பூபாளம் பாடும்
கொடிய எதிரியின்
கொட்டங்கள் அடங்கிட – எங்கள்
தேசமே பொங்கி எழும்!
சத்தமின்றியே – நிதமும்
செத்துமடிகின்ற
வீர விழுதுகள்
‘விடுதலை வேரை’ விசாலாமாக்கும் !
காவியனாயகர்களின்
கல்லறைகள்
சுதந்திரத்தை ஒலிக்கும்!
இது எங்கள் தேசத்து நிஜங்களே!
– முல்லைதரன்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”