பூநகரி நாயகர்களின் வீரவணக்க நாள்
பூநகரி நாயகர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது மேற்கொள்ளப்பட்ட “தவளைப் பாய்ச்சல்” நடவடிக்கையில் வீரச்சாவை தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் கோபி / குமணன், கடற்கரும்புலி மேஜர் கணேஸ் / குயிலன், தென்பராட்சி கோட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் குணா, லெப். சாள்ஸ் அன்ரசி சிறப்புப் படையணி தளபதி லெப். கேணல் நவநீதன், யாழ். மாவட்ட புலனாய்வுத்துறை பொறுப்பாளர் லெப். கேணல் அருணன் / சூட், மணலாறு மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் அன்பு, கடற்புலிகளின் மகளிர் துணைத் தளபதி லெப். கேணல் பாமா / கோதை உட்பட ஏனைய (460) மாவீரர்களின் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
11.11.1993 தொடங்கப்பட்ட படை நடவடிக்கையில் பூநகரி படைத்தளத்தின் பெரும் பகுதி விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டு தகர்த்து அழிக்கப்பட்டதுடன் பெருந்தொகையான போராயுதங்களும் வெடி பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
இவ் வெற்றிகரத் தாக்குதலில் கரும்புலிகள், கடற்கரும்புலிகள், மற்றும் தளபதிகள், போராளிகள் உட்பட 460 வரையான மாவீரர்கள் பூநகரி நாயகராக வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
|| வெற்றிக்கு வித்திட்டு கலடன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்………….
|| பூநகரி நாயகராக வெற்றிக்கு வித்திட்டு கல்லைறையில் உறங்கும் மாவீரச்செல்வங்கள்…..
நீளும் நினைவுகள்………..
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”