லெப். கேணல் பாமா நினைவாக……….
வீட்டு ஜன்னலுக்குள்
நிலவைச்
சிறைப்பிடிக்க விரும்பாது
விடுதலைச் சிட்டென
சிறகை விரித்தவள்.
இரண்டாயிரம் ஆக்கிரமிப்பாளர்
முகாம் எரிக்க
விழி சிவந்தவள்.
இனிய விடுதலையைக்
காதலித்து
நிலம் அதிர நடந்தவள்
துயரில் சுழன்ற நம்
வாழ்வின்
துயர் கொல்லும்
கருவி தாங்கியவள்
எங்களின் சின்னமுற்றத்தில்
விடுதலைத் துடிப்போடு
பாடுகிற ஆசையோடு
குரல் எடுத்தவள்.
தாய்த் தேசம்
விட்டுப் பிரிந்த
எமது இதயங்களிலும்
அவள் குரல்
இனிய விடுதலையை
வேண்டு ஒலிக்கும்.
“கடலிலே காவியம் படைப்போம்”