லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் வீரவணக்க நாள்
லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் வீரவணக்க நாள் இன்றாகும்.
தாயக விடுதலைக்காக புலமபெயர் நாடுகளில் பணிபுரிந்த வேளை 26.10.1996 அன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள லாச்சப்பல் பகுதியில் வைத்து சிறிலங்கா அரச கைக்கூலிகளின் துப்பாக்கி சுட்டுத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகிய மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
ஓ
மிப்புக்குரிய மாமனிதர்களே
உங்கள் தடங்களில்
ஒன்றா இரண்டா
இல்லை இல்லை
ஒரு தேசமே
அணிவகுத்துக்கொள்கிறது
உங்கள்
கல்லறை வரிகளை உச்சரித்துக்கொண்டு.
நாளை
புதுயுகம் பிறக்கும்
சுழலும் புயற் காற்றில்
நம்பிக்கை நாற்றுக்களின்
வேர்களும் எழுச்சி பெறும்.
– மாவீரன் கப்டன் கஜன் எழுதிய கவிதை.
* லெப். கேணல் நாதன் நினைவுப் பாடல்…….
* கப்டன் கஜன் நினைவுப் பாடல்…….
|| தாய்மண்ணின் விடியலின் கனவுடன் சிறகு விரித்து பறந்த புலம் பெயர்ந்த மண்ணில் விதையாக வீழ்ந்திட்ட விலைமதிப்பற்ற எங்கள் மாணிக்கங்கள்……….
பிரான்ஸ புற நகர்ப்பகுதியான லா குறுனோவ் எனும் இடத்தில் அமைந்துள்ள லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகிய மாவீரர்கள் வீரத்துயில் கொள்ளும் கல்லறை….
நீளும் நினைவுகளாய்…..
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”