கடற்கரும்புலி லெப். கேணல் அமுதசுரபி வீரவணக்க நாள்
கடற்புலிகளின் மகளிர் துணைத் தளபதி கடற்கரும்புலி லெப். கேணல் அமுதசுரபி வீரவணக்க நாள் இன்றாகும்.
முல்லைக் கடற்பரப்பில் 23.09.2001 அன்று சிறிலங்கா கடற்படையினருடனான கடற்சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்வேளை 26.10.2001 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட “கடற்புலிகளின் மகளிர் துணைத் தளபதி” கடற்கரும்புலி லெப். கேணல் அமுதசுரபி ஆகிய கரும்புலி மாவீரரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
|| பல வெற்றிகளுக்கு வித்திட்டு தாய்மண் கனவுடன் கல்லறையில் உறங்கும் உயிராயுதம்……………
நீளும் நினைவுகளாகி…..
திருகோணமலை மாவட்டம் உப்பாறு பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாமை தாக்குதவற்காக திட்டத்துடன் முநேரிவந்த சிறிலங்கா படையினரை வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
கப்டன் அகத்தியன் (துரைசிங்கம் நகுலேந்திரன் – மல்லிகைத்தீவு, மூதூர், திருகோணமலை)
கப்டன் நீலவாணன்(சுப்பிரமணியம் ராஜிக்கண்ணன் – இறால்குழி, மூதூர், திருகோணமலை)
2ம் லெப்டினன்ட் பூவிழி (கணபதிப்பிள்ளை றோகினி – கடற்கரைச்சேனை, மூதூர், திருகோணமலை)
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”