” மாவீரரே உமை மறவோம் “
தமிழன் மானம் காக்க
தமிழன் மண் காக்க போராடி
உயிர் கொடுத்த மாவீரர்களே
உங்கள் பாதங்களில் மலர் தூவி
வணங்குகின்றேன் நான்.
பெற்றெடுத்த உள்ளங்களை மறந்து
உடன் பிறப்புக்கள் , உறவினர்கள் , நண்பர்கள்
அனைவரையும் துறந்து
தமிழீழம் ஒன்றே தலையாய தீர்வு என
எதிரியுடன் வீரமுடன் போராடி
இன்னுயிரை நீத்த இனியவர்களே
உங்கள் பெருமைகளை எண்ணி
பூரிக்கின்றோம் நாங்கள் !
காடு மேடு தாண்டி நீங்கள்
கொடிய விலங்குகள் கடந்து
கொட்டும் மழையிலும்
கொடிய புயல்க்காற்றிலும்
உண்ணாமல் உறங்காமல்
மண்ணுக்காய் உயிர்க்கொடை
கொடுத்து விட்ட எமது தியாக தீபங்களே
வணங்குகின்றோம் உங்கள் பாதங்களை!
கார்த்திகைப் பூக்கள் எல்லாம்
கண் திறந்து சிரிக்கின்றது.
கண்மணிகள் திருநாள் என்று
கண் விழித்துப் பார்க்கிறது ?.
கொட்டும் மழையிலும் உங்களைக் காண
உறவுகள் காத்து நிற்கின்றனவே
புதைகுழியிலிருந்து நீங்கள்
விதையாகி வருவீர்கள் என
காத்திருக்கின்றோம் நாங்கள் .
எண்ணற்ற ஆசைகளை
இனிய கனவுகளைத் துறந்து வீட்டீர்
இலட்சியம் ஒன்றே எம் கொள்கை என
தமிழீழத்திற்காக உயிர் நீத்த
உங்கள் தியாகம் மகத்தானது.
உலகமே வியந்து போரும் உங்களுக்கு
மலர் தூவி மனமார அஞ்சலிகள் செலுத்துகின்றோம்.
வாழ்க உங்கள் புகழ் !!!
வாழ்க தமிழீழம் !!!
எதிர்கால சந்ததியின் உறவாய் புலத்தில் தமிழீழ விடியலை சுமந்த மாவீர நாளில் …
– புலத்திலிருந்து ஈழத்தாய் மகள் .