முள்ளிவாய்க்கால் முடிவல்ல..!
முள்ளி வாய்க்கால் முடிவல்ல..!
ஆறைந்து ஆண்டுகள் ஏந்திய தாயகம்
பற் துறை பல்கலை ஏற்றி வளர்த்து
பள்ளிச் சாலை முதல் பறக்கும் விமானம் வரை
கட்டி வளர்ப்பதைக் கண்டு மகிழ்ந்தனன் எம் தமிழ் ஈழவர்
படு நிலம் கடு நிலம் பச்சை பொன் விளை நிகழ்த்தினர்
பெரும் பசி தீர்த்து பெரும் தவம் ஏற்றினர்
துலங்கின ஈழ மண் உலகம் வியந்தன
மூகடல் நமக்கே நாதம் இசைத்தது.
அறம் புறம் அறிந்த செல்வன்
புன்னகையோடும் அன்புக் கொள்கைகள்
தத்துவ ஞானி அமைதி வழங்கிய அழகிய வெண்புறா
தந்தவன் நமக்கு எம் தாயகத்தலைவன் தலைவன்
சிந்தனை ஊற்றவன் சிறந்த நல் மேய்ப்பன் அவன்
விந்தை மனிதன் வீரத் திருமகன்
மறவர் குலத்தின் வேலவன்
குடிபுகுந்த நல் வன்னிப் பிராந்தியம்
முள்ளிவாய்க்காலில் முடிவுரையானதா ?
ஊரைப் பிரிந்த நல் உடமையும் பிரிந்து
முதுகில் சுமந்து போர்க்களம் காத்த நல்
வன்னி மக்கள் நீங்கள் வாசப் பூக்கள்
குண்டுகள் பொழிந்தும் உடல்களைத் துளைத்தும்
தம்பிப் படைக்கு சாரமாய் நின்றவர்
முற்றுகையால் முடிவை அறிந்தும் முடிவுரையாயினர்
இறுதி மூச்சினை மூழ்கி மடிந்தனர்
உலகே உனக்கும் ஒரு நாள் இக்கதி நிகழும்
முள்ளிவாய்க்கால் முடிவல்ல நமக்கு.
உலகை எமக்குப் அதனால்
முள்ளிவாய்க்கால் முடிவல்ல முகப்பு !
அருணாச்சலம் இராஜசிங்கம் – யேர்மனி