புரியவில்லை உனக்கு மட்டும்
அரசில் அரங்கேறி
அமர்ந்திருக்கும் அம்மணியே – உன்
அறாயகத்தின் காலமிதா?
அவலம் எம் தொடர்கதையா?
ஆழக்கடல் வந்து – எம்
ஈழக்கரை கொள்ள
வாழும்வழியற்று
வருந்துகிறாற் எங்களினம் – நீ
மீளக்கிழம்புகிறாய் – எம்
வாழ்வழிக்கும் போரிற்காய்
உதவிக்கு அழைக்கிறாய்
உலக நாடுகளை – எம்
இதயத்தை கிழிப்பதற்கு
இதுவும் உன் சதிவலையோ?
தந்திரத்தால் புலியை வெல்ல
பரப்புகிறாய் பொய் வதந்தி
எந்திரமான இவ்வுலகி;ல்
எடுபடுமா உன் வதந்தி
உறங்கினான் தமிழன் என்று
உன்நினைப்பு – அதனால்
இறங்கி வருவான் என்றோற்
இனிய கனவோ?
அழிவு கண்டு புனரமைக்க
அன்னியத்து படைகள் வாறான்
மகிழ்வு கொண்டு ஏற்போமா
மானமுள்ள தமிழர்நாம்
சுனாமி அடித்து ஓய்ந்துபோச்சு
ஆமி அலைகள் தொடருதிங்கே
ஆடுகள் நனையுதென்றே
அழுகிறது ஓநாய்கள்
பசித்தாலும் புல்தின்னா
பாயும்புலி தமிழன் என்று
பரந்திருக்கும் உலகறியும்
புரியவில்லை உனக்குமட்டும்
– முத்தையனூர் ப.துஷ்யந்தன்.