ஒளி கொடுப்பதற்காய் அணைகையிலே …
உலகே….
உனக்குள்
ஒரு
புதிய சாதனை
உலகே
உனக்குள்
ஒரு
புதிய அதிசயம்
உறவுகளே
உங்களுக்குள்
ஒரு
பிரிவின் துயரம்
உறவுகளே
உங்களுக்குள்
ஒரு
புயலின் பயணம்
அறக்களமே
உனக்கொரு
புதிய
மகுடம்
அறக்களத்தின்
பிறப்புநாள்
உனக்கொரு
அவசேதம்
ஈழ
நிலமே
உனக்குள்
ஒரு
புதிய வீரம்
ஈழ
நிலமே
உனக்குள்
ஒரு
பெரிய தேசம்
சாவே
வெல்வதற்காய்
நீ
அழைக்கப்பட்டாய்
சாவே
வெல்லமுடியாது
நீ
வெக்கப்பட்டாய்
வீண்மீன்கள்
எங்களிடம்
ஓர்
அற்புதத் தோழன்
வெந்துகொண்டிருக்கிறான்
வீண்மீன்கள்
உங்களிடம்
அந்த
அற்புதத் தோழன்
வந்துகொண்டிருக்கிறான்
புரட்சிப்
பறவையின்
சிறகு
தணிகிறது
புரட்சிப்
பறவைகள்
சிறகு
விரிக்கின்றன
பசியே
நீ
தோற்றாய்
சதியே
நீ
தோற்றாய்
பகையே
நீ
தோற்றாய்
ஒளி
கொடுப்பதற்காய்
அணைந்துகொண்டிருக்கிறது
திலீப தீபம்….
போராளிக் கவிஞன் லெப். கேணல் செந்தோழன்
விடுதலைப்புலிகள் (புரட்டாசி, ஐப்பசி 2004) இதழிலிருந்து தேசக்காற்று.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”