தேதி இன்று இருபத்தேழு…..
தேச விடியலுக்காய்
தேகம் கொடுத்தவரே
எங்கள் வான்பரப்பில்
இன்று மிளிருங்கள்.
மண்ணை நேசித்து
விண்ணில் வாழுமெங்கள்
மான மறவர்களே !
இன்று நாங்கள்
எங்கள் மண்ணில்
உம்மை வணங்குகின்றோம்.
ஆதவனும் மேற்கு வானில்
மெல்ல மறைகிறான்
ஆறு ஐந்தாக நேரம் ஆகிறது
காற்றும், கடலும், வானும், வயல்வெளியும்
ஈழ மண்ணெங்கும் அமைதி கொள்கிறது.
நீங்கள் துயில்கின்ற
புனித இல்லங்களில் ஜோதி எழுகிறது
உங்கள் உணர்வுகளை
நெஞ்சில் தாங்கியவாறு
நாங்களும் உருதியாகின்றோம்.
– கற்சிலையூர் நாகேந்தி.
(1999ம் ஆண்டு வரையப்பட்ட கவிதை)
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”