நிதர்சன நிலவே…
வண்ணக் கலை மகளே..
வசீகரப் புன்னைகையே..
வாய் மொழி இசைக் குயிலே
வளைந்தாடிய சித்திரமே
சிரித்தபடி செய்தி சொன்ன
செந்தமிழ்ச் சகோதரியே – கடல்
சேனைகளில் ஓர் தளபதி..
சிறிராமின் சோபனமே
சிங்கப்பூர் வீதிகளில்
சில்லறைகளைத் தேடி தம்
சொந்தங்களை விற்றுவிட்டுச்
சூழ்ச்சி வலை விரித்து உன்னைச்
சொறிநாய்கள் சீண்டியதோ..??
நீ பட்ட வலிகள் எங்கள்
நெஞ்சங்களில் ரணமாக
நீறு பூத்த நெருப்பு மீண்டும்
நேற்றிலிருந்து எரிகிறது ..
சூரியன் இல்லையென்று
சுதந்திர தாகம் தீர்ந்திடுமா?
சுற்றுலா வந்தவர்..
சுருட்டிக்கொண்டல்லவா ஓடினார்
நிதர்சன நிலவே..
நிம்மதியாக உறங்கு தாயே..
நினைவோடு நடக்கின்றோம்..
நிலை மாறும் விரைவில்..
நிச்சயம் தமிழீழம்!!
– முருகன்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”