கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) – 01
காவலாய் வாய்த்த கதிர்க்கையன் மாமறத்தை ஆவலாற் பாட அகமுற்றேன் –தாவிலாச் செந்தமிழே! தாள்பணிந்தேன் சின்னவனென் கற்பனையில் சிந்தாமல் முத்தமிழைச் சேர்! (1) சேர்ந்து தமிழரைச் சிக்கெனப் பற்றியவன் நேர்த்தியினைப் பாட நிறைதமிழைச் -சேர்த்தென்னில் தைத்த முருகடியான் தாளை வணங்கிடவும் வைத்தேன் ஒருவெண்பா யாத்து! (2) யாவர்க்கும் நல்லவா! ஈழத் தலைமகனே! காவலாய் வாய்த்த கதிர்க்கையா! –ஆவலாய் எந்தமிழ் மக்களை ஏற்றணைந்து காத்தவனே! தந்தையே தாள்பணிந்தேன் தாழ்ந்து! (3) தாழும் எமதினத்தைத் தாங்கித் தலைநிமிர்த்தி வாழும் இனமாய் வகைசெய்தாய்! […]
Read More