மூத்த தளபதி சொர்ணம்
திருமலையின் செல்லமே
எம் இதயச்சுடர் சொர்ணமே !
தலை நிமிர்ந்து சொல்கின்றேன்
நான் தமிழன் என்று
உன் தாழ் பணிந்து வணங்குகின்றேன்
நீ மாவீரன் என்று .
வேரோடு உனையளிக்க
நீ என்ன விதையற்ற மரமா.
உன் இரத்தம் நானிருக்க
காலன் உன்னை வெல்லுமா
தலைவனின் தம்பி நீ
தமிழினத்தின் சொத்து நீ
தேசிய தலைவனின் சிந்தனைக்கு
செயல் வடிவம் கொடுத்தவன் நீ …
என் சேனை தளபதியே
கட்டளை தளபதியாய்
நீ களமாடிக் கண்ட வெற்றி
காலத்தால் அழியாதையா …
வீர மறவா
உன் தலைவனின் உயிர் காக்க
கடைசிவரைக் களமாடிக்
காவியம் படைத்தவன் நீ.
மாவீரச் செல்வனே
நூறாண்டு போனாலும்
உன்னை நினையாது இருப்போமா ?..
வீரத்தின் விலை நிலமாய்
உயர்ந்து நின்ற உனது உருவும்
உன் சொல்லும் கூட
பகைவரின் நெஞ்சறுத்து சென்றதன்ரோ ….
தாய் மண்ணின் காவலனே
கடைசி உன் மூச்சு வரை
ஈழம் ஒன்றே தாகம் என்ற இறுதி முடிவோடு
மாற்றான் உன்னை மாய்ததாக
மார்தட்ட இடமின்றி மரணத்தை அணைத்தாயே
தமிழ் மானத்தை காத்தாயே …
– அ . தனு.