மரணத்தை வென்றவர்
வலிகள் நிறைந்த விடலைகள் நாங்கள் .
படலைகள் திறந்து நடக்கிறோம்.
களங்களை நோக்கி.
சிறைகளை உடைத்துப்
படைபல திரட்டி
தடைகளை உடைக்கிறோம்
மரணத்தை வென்று
மகுடத்தைக் கொண்டு
மறுபடி அமைக்கிறோம் தமிழ் அரசு
வீழ்ந்தவர் எல்லாம்
தாழ்ந்தவர் கிடையாது
மரணத்தை வென்று
மறுபடியும் பிறந்தவர்கள்.
களங்களில் படைத்த சரித்திரங்கள்
இன்று மறைந்து போய் .
மௌனமாய் சுழல்கிறது மனதில்.
மறுபடியும் மலர்ந்திடுமா தாயகம்
அதில் மகிழ்ச்சியாய் வாழ்ந்திடலாமா
நாம் என்று மனங்களில் கேள்விகள் எழுகிறது.
கவியாக்கம்:- காவலூர் அகிலன்.
கிளிநொச்சி.
”தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”