லெப். கேணல் மணிவண்ணன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்
லெப். கேணல் மணிவண்ணன், லெப். கேணல் தர்சன், லெப். கேணல் அசோக்குமார் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
|| வெற்றிக்கு வித்திட்டு கல்லைறையில் உறங்கும் மாவீரச்செல்வங்கள்…..
“ஓயாத அலைகள் 03” பாரிய படை நடவடிக்கையில் 04.11.1999 அன்று மணலாறு ஒதியமலை பகுதியில் சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட “லெப். கேணல் விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி தளபதிகளில் ஒருவரான” லெப். கேணல் மணிவண்ணன் ஆகிய மாவீரரின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
ஓயாத அலைகள் – 03 பாரிய படை நடவடிக்கையில் 04.11.1999 அன்று முல்லை மாவட்டம் கரிப்பட்டமுறிப்பு பகுதியில் சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட “லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி” மேஜர் இராசநாயம் உட்பட ஏனைய மாவீரர்களின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள்
மேஜர் இராசநாயம்
லெப். ஆருரான்
2ம் லெப். திருக்குமரன்
2ம் லெப். வல்லவன்
2ம் லெப். சுபாசன்
வீரவேங்கை தீபன்
04.11.2000 அன்று களநிலைகளில் காவலரண் பகுதிகளை அவதானித்துக் கொண்டிருந்தபோது சிறிலங்கா இராணுவத்தின் குறிசூட்டுத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட “கேணல் கிட்டு பீரங்கிப் படையணி பளை – நாகர்கோவில் ஒருங்கிணைப்புத் தளபதி” லெப். கேணல் தர்சன் ஆகிய மாவீரரின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தாய்மண்ணின் விடியலுக்காக 04.11.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப். கேணல் அசோக்குமார் ஆகிய மாவீரரின் 9ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
நீளும் நினைவுகளாகி………….
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”