நீல வரி தரித்த இரும்பொறை வீரனே!!
வீரக் கடற்புலிகளின் துணைத் தளபதியே!! வீரவணக்கம்
நீல வரி தரித்த இரும்பொறை வீரனே!! வீரவணக்கம்
திருக்கோண மாமலை துறைமுகம் அதிர செங்களம் ஆடியவன்
எமனேறும் – இரு கப்பல்கள் மூழ்கடித்து – அங்கே
பகையேறி வந்த வான்கலம் ஒன்றையும் வீழ்த்திய வீரனே!!
ஈனப் படைகொண்ட கயவர் கூட்டத்தை – எல்லையில்
உடல் கிழித்துப் – போர்க்களத்தில் புறமுதுகிடச் செய்தவன்
பருத்தித்துறை கடற்பரப்பில் – துரும்பரை நீ எதிர்த்துக்
கயவர்கள் படகினை கலங்கடித்த வெஞ்சமரில்
சிந்திய உன் செங் குருதி உப்பு நீருடன் சங்கமிக்க
வீரச் சாவடைந்த கடற்புலித் தளபதியே!! வீரவணக்கம்!!
இரும்பொறை என்றொரு பெயர் கொண்டு
பெரும்பகை தகர்த்தழித்தான் கரிகாலன் தளபதியே!!
உங்களிற்கு எம் சிரம் தாழ்த்திய கண்ணீர் அஞ்சலிகள்!!
உங்கள் பணி – விட்ட இடத்திலிருந்து தொடர்வோம்
என உறுதி எடுத்துக் கொள்கின்றோம்.
கவியாக்கம்:- சகோதரன் நடேசன் திரு.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாகம்”