லெப். கேணல் ராஜன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்
லெப். கேணல் ராஜன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்
யாழ். மாவட்டம் மற்றும் அம்மாறை மாவட்டத்தில் சிறிலங்கா படையினருடன்ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச் சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் ராஜன், லெப். கேணல் றஞ்சன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
|| வெற்றிக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்….
யாழ். மாவட்டம் மாதகல் பகுதியில் 27.08.1992 அன்று சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிய சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் முன்னாள் சிறப்புத் தளபதி, அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பதிகாரி லெப். கேணல் ராஜன் உட்பட ஏனைய (09) மாவீரர்களின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
லெப்.கேணல் ராஜன் (றோமியோநவம்பர்)-(சோமசுந்தரம் சற்குணம் – மாதகல், யாழ்ப்பாணம்)
கப்டன் கணேசன் (கணேஸ்)-(புண்ணியமூர்த்தி ரகு – கந்தளாய், திருகோணமலை)
கப்டன் வன்னியன்-(கணபதிப்பிள்ளை கணநாதன் – துணுக்காய், முல்லைத்தீவு)
லெப்டினன்ட் தயாபரன் (பார்த்தீபன்)-(சிவசுப்பிரமணியம் சிவசொரூபன் – யோகபுரம், முல்லைத்தீவு)
லெப்டினன்ட் அருளையன் (பிரதீப்)-(சாமித்தம்பி மகிந்தன் – புதுக்குடியிருப்பு, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் இளங்கோ (யோகராஜா)-(பாஸ்கரன் பிரபாகரன் – தையிட்டி, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கலைச்செல்வன் (குகன்)-(இரமயநாதன் புனிதராசன் – பருத்தித்துறை, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை மதியழகன்-(நடராசா பூவிலிங்கம் – புலோப்பளை, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அறிவழகன்-(நாகலிங்கம் சிவகுமார் – கும்பிழான், யாழ்ப்பாணம்.)
அம்பாறை மாவட்டம் வம்மியடிக்குளம் பகுதியில் 27.08.1995 அன்று சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அம்பாறை மாவட்டத் தளபதி லெப். கேணல் மாருதியன் / றஞ்சன் உட்பட ஏனைய (08) மாவீரர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
அம்பாறை மாவட்டத் தளபதி லெப்.கேணல் மாருதியன் (றஞ்சன்) (செல்லத்துரை பிரபாகரன் – தம்புலுவில், அம்பாறை)
கப்டன் கமால் (கந்தையா செல்வராசா – அம்பாறை)
கப்டன் மதனமோகன் (கிறிஸ்ரி) (செல்லத்துரை நாகேந்திரன் – கோமாரி, அம்பாறை)
லெப்டினன்ட் நவரங்கன் (நிசாந்தன்) (கிருஸ்ணபிள்ளை ராஜமோகன் – தம்புலுவில், அம்பாறை)
2ம் லெப்டினன்ட் அறிவொளி (பீதாம்பாரம் ரவிச்சந்திரன் – கன்னங்குடா, மட்டக்களப்பு)
வீரவேங்கை இந்திரன் (செல்லையா ராஜீ – பொத்துவில், அம்பாறை)
வீரவேங்கை லிங்கேஸ்வரன் (தில்லையன் சிவராஜா – கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு)
அம்பாறை மாவட்டத்தில் சுகயீனம் காரணமாக சாவினை அணைத்துக் கொண்ட…
2ம் லெப்டினன்ட் சுரேந்திரன் (காதர்) (நாகப்பன் விஸ்வநாதன் – குருக்கள்மடம், மட்டக்களப்பு)
யாழ். மாவட்டம் அச்சுவேலிப் பகுதியில் 27.08.1995 அன்று சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து நடாத்திய தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் அக்காச்சி, 2ம் லெப். தில்லைநாதன் ஆகிய மாவீரர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
லெப்டினன்ட் அக்காச்சி (அப்துல்லா) (செல்வரத்தினம் குமரசீலன் – சுண்ணாகம், யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் தில்லைநாதன் (நல்லதம்பி நகுலேஸ்வரன் – கொடிகாமம், யாழ்ப்பாணம்)
நீளும் நினைவுகளாகி…………….
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
Source: New feed
லெப். கேணல் ராஜன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்