கதைகள் படிப்போம் வா…..
பாரங்களைச் சுமக்க
வலிய தோள்களை உடைய
வாலிபங்கள் வேண்டும்
“எனக்கென்னடா”
என்றிருத்தல்
யார் சொன்னது சுகமென்று?
ஒதுங்கிப் போறது, பாராது இருப்பது
கேளாதிருப்பது, பேசாது இருப்பது
போராடாது இருப்பது
எல்லாமுமே திரண்டு
உருப்பெருத்து
வாசலில் வந்து கதவுகளைத் தட்டும்
உன் வீட்டுன் கதவுகளைத் தட்டும் போதுதான்
நீ விழிப்பது என்றிருக்கிறாயா?
உன் நெஞ்சக் கதவுகளைத் திற!
விசையுற எழுகிறது பார்
எங்களின் விடுதலைப் படகு.
கதிர்கள் விரிக்கின்ற எங்களின் பூமியின்
கதைகள் படிப்போம் வா.
கவியாக்கம்:- வாசன் (1995ம் ஆண்டு வரையப்பட்டது).
ஓவியம்:- புகழேந்தி.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”