கடற்கரும்புலி லெப். கேணல் சிலம்பரசன்
உயிர் கூட்டிலிருந்து பிரிந்தபறவை : கப்பல் கப்டன் சிலம்பரசன்
” ஜெயரஞ்சன் A/L தோதினையில் பாஸ் பண்ணிட்டானாம். அவனுக்கு பி.கொம் கிடைச்சிருக்காம் ” என்ற செய்தி அப்பாவின் காதுக்கெட்டியது. வீட்டில் எல்லோருக்கும் அவனை நினைக்கப் பெருமிதமாயிருன்தது. அப்பா அந்தச் செய்தியையும் காவிக்கொண்டு ரஞ்சனிடம் போனார். ஆனால் அந்தச் செய்தி அவன் காதுகளுக்கு எட்டமுன்பே அவன் தன திறமைகளை இந்த தேசத்திற்க்கா அர்ப்பணிக்கத் தயாராகியிருந்தான். அப்பாவினால் அவன் முன்வைத்த வினாவிற்கு பதிலளிக்க முடியவில்லை. ஏனென்றால் அவை மறுக்கப்பட முடியாததாயிருந்தது. அப்போது அவன் பல்கலைக்கழகப் படிப்பிர்க்குள் முடங்கிபோகாமல் அவன் எடுத்த முடிவு எங்கள் கடற்செனையில்ன் ஒரு கடற்தளபதி என்ற நிலைக்கும் எழுதுகோல்களுக்குள் புகுத்தமுடியாத அவன் சாதனைகளுக்கும் வழிவகுத்தன.
அந்த வீரனைப் பற்றி இப்போது சொல்லக் கூடியவற்றை மட்டும் சுமந்தபடி அவனின் கடந்தகால வாழ்க்கைக்குள் எண்ணங்கள் நுழைகின்றன.
1992ம் ஆண்டு காலப்பகுதியில் இந்தப் போராட்டத்தின்பால் ஈர்க்கப்பட்டுச் செயர்ப்பட்டவன். 1994ம் ஆண்டளவில் தன்னை முழுமையாக இயக்கத்தில் இணைத்துக் கொண்டான். அந்த நாட்களில் அவனுக்கு முதலில் கிடைத்தது அரசியற்பணி. இளம் வயதிலேயே ஒரு முதிர்ச்சியாளனுக்கேயுரிய அறிவைக்கொண்டு அரசியற்பணியை சரிவரச்செய்த்து வந்த அவனுக்கு 1995ம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற யாழ்குடாநாட்டிலிருந்தான இடப்பெயர்வு பெரும் சவாலாக அமைந்தது. குறுகிய கால அவகாசத்திற்குள் எமது போராளிகளையும் எமது வளங்களையும் ஒருங்கிணைத்து வன்னிக்கு அனுப்ப வேண்டிய பாரிய பொறுப்பு அவனிடம் ஒப்படைக்கப்படுகிறது. குறைந்தளவு வளங்களோடு கூடியளவு செயர்த்திறனைக் காட்ட வேண்டிய நிலை அவனுக்கு. ஆனாலும் துணிவோடு அதைச் சவாலாக ஏற்று குருநகர் ஐந்து மாடிக்கட்டிடத்தில் நின்றபடி கடற்புலிகளின் போராளிகளுக்கு நிதானமானது சாதிரியமானதுமான கட்டளைகளை வழங்கி சிக்கலான அந்தப் பணியைச் செய்து முடித்தது. அவன் திறமையின் முதற்சான்றாய் அமைந்தது.
ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு துறையில் ஈடுபாடும் திறமையும் உள்ளதென்பது சாதாரணமான விடயம். ஆயினும் எல்லத்திரமைகளையும் தன்னகத்தே கொண்டு இயங்குபவர்கள் பலர் இருக்கமுடியாது. இந்த சிலம்பரசன் அந்தச் சிலருக்குள் அடங்குகிறான். ஒரு விடுதலைப்போராட்ட அமைப்பான எங்களின் கடல் அணியில் இருந்தபடி தான் வாழ்ந்த காலத்தில் கடந்து வந்த கடினபாதையின் எல்லாச் சுமைகளிலும் தொல்கொடுத்துச் சுமந்தவனவன்.
அது 1998ம் ஆண்டின் நாட்கள். யாழ்ப்பாணத்தினை ஆக்கிரமித்துள்ள சிங்கலபடைகள் கடல்வழியை நம்பியே உயிர்வாழ்வதால் அதற்குத் துணைபோகும் கடற்கலங்களை வழிமறித்து தாக்கி அழிக்கத்திட்டம் திட்டப்படுகிறது.
சிங்கள கடற்படையின் கப்பல்கள் பயணம் செய்யும் ஒரு இரவுப்பொழுதில் கடற்புலிகளின் தளத்தில் இருந்து லெப் கேணல் நிரோஜனின் கட்டளையின் கீழ் கடற்சமர்க்களம் புக கடற்புலிகள் தயாராகினர். அங்கே தாக்கப்ப்படும்போகும் கப்பலொன்றை அழிக்கும் பொறுப்பு சிலம்பரசனிடம் வழங்கப்பட்டுகின்றது.
சிலம்பரசன் தன் திட்டத்திற்குச் செயல்வடிவம் கொடுக்கவும் போராளிகளையும் கடற்கலங்களையும் தயாராக்கினான். புறப்படுவதற்கு முன்பாகவே தன் போராளிகளுடன் சேர்ந்து , கப்பலை அழிக்காது தளம் திரும்புவதில்லை என்று உருதியெத்துக்கொள்கிறான். புலிகளின் கடற்கலங்கள் கடலுக்குள் இறக்கப்பட்டு கடற்சமர்க்களம் நோக்கி புறபடுகிறன. கூடவே கடற்கரும்புலிப்படகுகளும் புறப்படுகின்றன. மூன்று சண்டைப் படகுகளும் – இரண்டு கரும்புலிப் படகுகளும் கொண்ட கடற்புலிகளின் தாக்குதலணி எதிரியின் பாரிய வழங்கல் அணியில் பயணித்த ” பபதா ” – ” வலம்புரி ” ஆகிய கப்பல்கல்களையும் ஒரு தரையிறங்கு காலத்தையும் அவர்ரிர்க்குப் பாதுகாப்பாக பயணித்த அதிவேக டோறாப்படகுகள் ஆறினையும் அவற்றிற்கான துணைபடகு நான்கினையும் எதிர்கொள்ளப் போகிறன. படகுகளின் பலம் என்று பார்க்கும் பொழுது கடற்புலிகளின் பலம் எதிரியுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாததாய் இருந்தது. அனாலும் துணிச்சல் மிக்க வீரர்களால் அந்தக்கடற்சமர் எதிர்கொள்ளப்படுகிறது.
முல்லைத்தீவுக்கு நேராக அந்தக் கடற்படையின் கப்பல் அணியை தடுத்துச் சமர்புரிய முனைந்தபோதும் அவை தாக்குதலில் இருந்து தப்பிக்க முயன்றன.
ஆனாலும் பருத்தித்துறைக்கு நேரே கடற்புலிகள் கடற்படையின் கப்பல்களை வழிமறித்துச் சமர்புரியத் தொடங்கினர்.
கடற்புலிகளின் தலைமையகத்துடன் தொடர்பில்லாதது முற்றிலும் சாதகமற்றதும் எதிரியின் எல்லைகளுக்குள்ளும் நின்றபடி கடற்சமரை லெப் கேணல் நிரோஜன் வழிநடத்த அதற்குத் துணையாக சிலம்பரசன் தன்படகை வழிநடத்தி சமர்புரிந்து கொண்டிருந்தான்.
அந்தக்கப்பற் தொகுதியில் பயணித்த வலம்புரிக்கப்பல் மீது இலக்கு வைத்து சிலம்பரசனின் படகு தாக்குதல் நடாத்தியது. எதிரியின் கப்பல்களை நெருங்க விடாது டோறாக்கள் நெருப்பு மழை பொழிந்த போதும் துப்பாக்கிச் சன்னங்களிடையே தன்னுடன் வந்த கரும்புலிப்படகிற்குப் பாதை அமைத்துக் கொடுத்து வலம்புரிக் கப்பலை அழிக்கும் நடவடிக்கையில் வெற்றிகண்டான் சிலம்பரசன்.
வலம்புரிக்கப்பலும் – பபதாக்கப்பலும் கடலில் மூழ்கிக்கொண்டிருக்க சாதகமற்ற சூழலுக்குள் இருந்து தளம் திரும்பின கடற்புலிகளின் அணிகள்.
கடற்புலிகள் அணியின் பல்துறை சார்ந்த செயற்பாடுகளில் எந்த செயற்ப்பாட்டிலும் இருக்கநிலை வந்து அடுத்த கட்டங்களிற்கு நகருவதற்கு தடை ஏற்படின் அந்தத் தடைகளை உடைக்கும் முதல் மனிதனாக சிலம்பரசனின் உருவம் கடற்புலிகளின் சிறப்புத்தளபதியின் முன் தோன்றும். அவ்வாறுதான் கடற்புலிகளின் விநியோக அணியானது நெருக்கடி நிலையைச் சந்தித்தபோது தமிழீழத் தேசியத்தலைவராலும் கடற்புலிகளின் சிறப்புத் தளபதியாலும் அந்தப்பணிக்கு சிலம்பரசன் நியமிக்கப்பட்டான்.
இயல்பாயே தனித்துவமான திறமைகளைக் கொண்டிருந்த சிலம்பரசன் கடல்சார்ந்து தான் பேரிருந்த கல்வி மூலமும் தனது துணிவும் மதிநுட்பமான செயற்திறன் முலமும் நெருக்கடிகளைத் தாண்டி கடலில் கடற்புலிகள் விநியோகப்பணியை வெற்றிகரமாக நிறைவு செய்து எமது விடுதலைப் போராட்டங்களில் ஏனையபோராளிகள் காலங்களில் புரிந்த பல சாதனைகளுக்கு வெளித்தெரியாமல் உழைத்தவன்.
கடற்புலிகளின் விநியோகப்பணியில் ஈடுபட்ட நாட்களில் தனது விநியோக அணியின் உதவியுடன் சிறிலங்காவின் கடற்களைங்க்களை அழிக்க வென்றும் என்ற எண்ணமும் அவன் மனதில் எழுந்தது. தன் எண்ணக்கருவைச் செயல் வடிவமாக்க கடற்புலிகளின் சிறப்புத் தளபதியின் அனுமதியுடன் திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் உகின கப்பல் மீதான் தாக்குதல் நடவடிக்கைக்கு லெப் கேணல் பழனி தலைமையில் கடற்புலிகளின் தாக்குதற் படகுகள் கடலிற்குள் இறக்கப்படுகிறன.
முல்லைத்தீவுக்கு நேரே 50 மைல்களைக் கடந்த தூரத்தில் கப்பலை வழிமறித்துத் தாக்க கடற்புலிப்படகுகள் பயணித்துக்கொண்டிருந்தன. ஆனால் அந்தப் பயணத்தின் போது கடல் ஒத்துழைக்க மறுத்துக்கொண்டிருந்தது. அதிகரித்து வீசிய கடற்காற்றின் வேகம் படகுகளைச் சரியான இலக்கை நோக்கி நகர்த்தத் தடையாய் இருந்தது. ஆனாலும் எடுத்த முயற்சியிலிருந்து பின்வாங்குவதில்லை என்பதற்காய் கடல் கொந்தளித்துக்கொண்டிருந்த இரவுப்பொழுதில் இலக்கிற்க்காகக் காவலிருந்து தாக்குதலைத் தொடுத்தனர் கடற்புலிகள்.
தாக்குதலின் உச்சக்கட்டம் கரும்புலிப்படகுகள் கப்பலை மோதித் தகர்க்கப்போகின்றன. அந்த வெடியதிர்வின் பின்னால் நான்கு கடற்கரும்புலிகள் இந்த மண்ணிற்காய் மடியப்போகிரார்கள். சமர்க்களத்தை நோக்குகிறான் சிலம்பரசன்.
எதிரியிடமிருந்து கிடைக்கும் எதிர்ப்பு சற்றுத்தணிந்து கொண்டு போகிறது. உடனடியாக இரண்டு கடற்கரும்புலிகளை கடலுக்குள் குதிக்கும்படி கட்டளை வழங்குகின்றான். இரண்டு கடற்கரும்புளிகளுடன் அந்தக் கரும்புலிப்படகு ” உகின ” கப்பலில் மோதி வெடிக்கின்றது. நிலையிலாது தளம்பிக்கொண்டிருக்கும் ஒரு படகில் நின்றபடி தன் கடல்சார்ந்த அறிவின் மூலம் அந்தக் கடற்சமர்க்களத்தில் அவன் எடுத்த முடிவானது இரண்டு கடற்கரும்புலிகளை அந்த தாக்குதலில் இழக்காது அந்தக் கப்பலை அழிப்பதற்காக நாங்கள் செலுத்த வேண்டிய உயிர்விளையைக் குறைத்திருந்தது. அந்த இரு கரும்புலிகளையும் தனது படகில் ஏற்றியபடி தளம் திரும்பினான் சிலம்பரசன்.
இப்படியான அவனின் நிதானித்த செயற்பாடுகள் பல கடினமான பணிகளை நிறைவேற்றக்கூடிய மனிதனாக அவனை இனக்காட்டியது.
அதனால்த்தான் ஓயாத அலைகள் 3 நடவடிக்கையின் முதற்கட்டத்தில் கடற்புலிகளுக்கு வழங்கப்பட்ட பணி சிலம்பரசனின் வழிநடத்தலில் விடப்பட்டுகின்றது. இதுவரை அவன் எதிர்கொண்ட சமர்களுடன் ஒப்பிடும்போது இது சற்று வித்தியாசமானதாயிருந்தது. இதுவரை கடலிலிருந்து கொண்டு கடலிற்குள் நிற்கும் எதிரியுடன் தான் சமர் புரிந்தார்கள். ஆனால் இங்கே கடலில் நின்றபடி தரையில் இருக்கும் எதிரிக்குத் தாக்கும் பணி.
கடற்புலிகள் இப்படியான சமரைச் சந்திப்பது இதுவே முதற்தடவை.
சமர்க்களம் தரைப்புலிகளால் தொடங்கிவைக்கப்படுகின்றது. கட்டைக்காடு முன்னரங்க நிலைகளை உடைத்து உள்நுழையும் முயற்சியில் தரைப்புலிகள் ஈடுபட்டனர். சிலம்பரசன் தனது படகுடன் ஏனைய கடற்புலிப் படகுகள் சிலவற்றையும் அழைத்துக்கொண்டு கட்டைக்காடு – வெற்றிலைக்கேணி கரையோரமாக உள்ள காவலரண்களை துடைத்தழிக்கும் நடவடிக்கையில் இறங்குகிறான். தரையில் நிலையாக மூடியாடைக்கப்பட்ட காப்பரணுக்குள் நின்றபடி துப்பாக்கி சன்னங்களையும் குண்டு மழையினையும் பொழியும் எதிரி மீது கடலில் நின்றபடி தாக்குவதென்பது இலகுவானதாயிருக்கவில்லை. கடற்புலிகளின் படகுகள் கடலில் நின்றபடி தாக்குதல் நடாத்தத் தொடங்கியதும் சிங்களப் படையின் டோறாப்படகுகள் கடற்புலிகளின் படகுகளைத் தாக்கத் தொடங்கின.
அன்றைய சூழ்நிலையும் கடற்புலிகளின் சிறிய சண்டைப்படகுகளுக்கு உகந்ததாக இருக்கவில்லை. கடற்காற்று பலமாக வீசிக்கொண்டிருந்ததால் இலக்குகளை குறிவைத்து தாக்குவது சிரமமாகவிருந்தது. ஆனாலும் அன்றைய சமர்க்களத்தில் அது முக்கியமான பணியாகவிருந்தமையினால் அவன் தொடர்ந்தும் எதிரியின் இருப்பிடங்கள் மீது கடலில் நின்றபடி தாக்கிக்கொண்டிருந்தான். அந்தப் பணியின் ஒரு கட்டத்தில் சிங்கள விமானப்படையின் உலங்கு வானூர்த்தித் தாக்குதலில் அவன் தலையில் காயப்ப்படும்வரை எதிரியின் இலக்குகளை அழித்துக்கொண்டிருந்தான். அந்தச் சமரின் முடிவில் அந்த ஊர்கள் எங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தன.
இப்படியான அவனின் வெற்றிகளுக்கு காரணமாய் இருந்தவை எல்லாம் அவனின் திறமைகளே …! எந்தச் சமர்க்களத்திலும் எந்த இறுக்கமான கட்டத்திலும் நிதானித்து பதட்டமிலாமல் முடிவெடுத்துச் செயற்படுவது அவனது வெற்றிகளுக்கு முதல் காரணாமாய் இருந்தன.
சண்டைகளுக்காகவோ அல்லது விநியோகங்களுக்காகவோ அவன் செல்லும் போது ஆண் போராளிகளுக்குச் சமமாக பெண்போராளிகளையும் அழைத்துக் கொண்டு செல்வான். இன்று கடற்புலிகளின் கட்டளை அதிகாரியாக செயற்படும் ஆண் – பெண் போராளிகளை வளர்த்தெடுத்ததில் கணிசமான பங்கு சிலம்பரசனுக்கே உரியது.
பெண் போராளிகளும் கடலில் சாதிக்க முடியும் என்பதை கடலில் நீருபித்த கடற்புலிப்பெண் போராளிகளின் வளர்ட்சிக்கு சிலம்பரசன் கொடுத்த ஊக்குவிப்பும் , சர்ந்தப்பமும் முக்கியமானது.
ஒவ்வொரு தாக்குதலின் முடிவிலும் அல்லது ஒவ்வொரு விநியோகப் பனியின் முடிவிலும் தன்னுடன் செயற்பட்ட போராளிளை ஒய்வாயிருகும் நேரங்களில் அழைத்து அந்தப் பணியில் அவர்களின் செயற்ப்பாட்டில் இருந்த சரியான , தவறான செயற்ப்பாடுகளைச் சுட்டிக்காட்டி அடுத்த கட்டத்தில் அதை எப்படி முன்னெடுக்கலாம் என்பதை அவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பான்.
அவன் சாள்ஸ் படையணியின் பொறுப்பாளனாக இருந்த காலங்களிலெல்லாம் தான் ஒரு கட்டளை அதிகாரி என்ற நிலையில் மட்டுமே நின்று கொள்ளாது , ஒரு கடற்புலிப்போராளியின் பல்வேறு வகையான பணிகளுக்குள் தானும் முகம் கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தி விளைவுகளை பயன்மிக்கதாய் ஆக்கும் திறமை அவனிடமிருந்தது.
ஒரு போராட்ட அமைப்பகவிருந்து வளர்ந்து கொண்டிருக்கும் படை என்கின்ற ரீதியில் வீணாக எந்தவொரு வளத்தையும் இழந்து விடக்கூடாது என்பதில் அவன் அக்கறையாய் இருந்தான் என்பதை அவன் கடற்சமர்கலங்களில் எடுக்கும் முடிவுகள் காட்டிநின்றன.
ஒருமுறை வன்னித்தளம் நோக்கி போராளிளை ஏற்றி இறக்கும் பனி கடற்புலிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது. அந்தப் பணியில் சிலம்பரசனும் சென்றிருந்தான். போராளிகளை இடமாற்றும் இந்தச் செயற்ப்பாட்டைஎதிரி அறிந்து கொண்டதால் எதிரி கடலில் வைத்து சண்டை புரிவதற்குத் தயாராகயிருந்தான். போராளிகளை ஏற்றிய படகுகள் பயணிக்க அவற்றிற்குக் காவலாய் கடற்புலிகளின் சண்டைப்படகுகளும் வந்துகொண்டிருந்தன.
எதிர்பார்த்திருந்த கடற்படையின் தாக்கும் கலங்கள் போராளிகளின் படகுகள் மீது குறி வைக்கின்றன. நாங்கள் கொண்டு செல்லும் போராளிகளுக்கு எதுவும் நடக்கக் கூடாது என்பதற்காக கடற்புலிகளின் சண்டைப் படகுகள் முன்சென்று எதிரியை எதிர்கொண்டன.
கடற்புலிகளின் படகுகளை செல்லவிடாது எதிரிதடுத்துச் சண்டையை இடைவிடாது தொடர்ந்த வண்ணமிருந்தான்.
சண்டையின் ஒரு கட்டத்தில் கடற்புலிகளின் சண்டைப்படகு தாக்குதலுக்குள்ளாகிறது. அதிலிருந்த போராளிகள் சிலர் வீரச்சாவடைகின்றனர். படகின் இயந்திரங்கள் செயலிழக்கின்றன. படகின் கட்டளை அதிகாரியாகச் செயற்ப்பட்ட அவனுக்கு படகை இயக்க முடியாவிட்டால் அதனை அளித்துவிட்டு வரும்படி கடடளை கிடைக்கின்றது. ஆனாலும் சிலம்பரசன் அந்தப் படகை இழக்க விரும்பவில்லை. ஏனெனில் அந்தப்படகை கடற்புலிகளின் தாக்குதற் காலமாக மாற்றுவதற்காய் பட்ட சுமைகளை தாங்கியத்தில் அவனுக்கும் பங்கிருந்தது. அதனை விட அவன் படகின் கட்டளை அதிகாரியாக மட்டுமல்லாமல் படகின் ஏற்ற நிலைமையையும் கையாளக்கூடிய திறமையிருந்ததால் , அவன் அந்தப் படகின் இயங்க மறுத்த இயந்திரங்களை இயக்கம் நிலைக்கு கொண்டுவர கடும் முயற்சி செய்தான்.
அவன் முயற்சியின் பலநாள் அன்றைய நாளில் இழக்கப்பட வேண்டிய அந்தப்படகு இழக்கப்படாமல் இருந்தது.
இப்படித்தான் சின்ன சின்னச் சின்ன விடயங்க்களிலேலாம் முன் மாதிரியாகச் செயற்ப்பட்டுப் போராளிகளுக்கு கடலின் நுட்பங்களைச் சொல்லிக் கொடுத்தான். ஒரு படகில் பல்வேறுபட்ட வேலைகளை ஒவ்வொரு நிலையிலும் நிற்பவர்கள் செயற்படுவார்கள்…. ஒரு கட்டளை அதிகாரியாக , படகொட்டுபவனாக , தொலைத்தொடர்பாளனாக , இயந்திரத் துப்பாக்கி சூட்டாளனாக என விரியும் பணிகளில் எல்லாப் போராளிகளும் எல்லா நிலைகளுக்கும் உரியவர்களாக வளர்க்கப்பட வேண்டும் என்பதில் அவன் கவனமெடுத்துச் செயற்ப்பட்டான். அதற்கேற்றால் போல் தன் கீழ் பணிபுரியும் போராளிகளுக்கு சர்ந்தப்பங்க்களை ஏற்படுத்திக்கொடுத்து அவர்களின் வளர்ட்சிக்கு உருதுணையாயிருந்தான். ஏனெனில் சண்டைக் களங்களில் படகின் ஏதாவது ஒரு நிலையில் நிற்கும் போராளி செயலிழந்துவிட்டால் அதை உடன் நிவர்த்தி செய்யக் கூடியவாறு இருக்க வேண்டும் என்பதை அவன் அனுபவங்களின் ஊடாக உணர்ந்திருந்தான்.
இந்த அனுபவங்களோடுதான் வரலாற்றுச் சிறப்பு மிக்க குடாரப்புத் தரையிறக்கப் படைநடவடிக்கையின் ஆரம்பத்தில் ஒரு படகுத் தொகுதியின் கட்டளை அதிகாரியாகச் செயற்பட்டான். விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் சவாலாக ஏற்றுச் செய்த இந்தப்பணியில் சிலம்பரசனின் பங்க்குமிருந்தது. கட்டைக்காடு – வெற்றிலைக்கேணி பகுதியைக் கைப்பற்றும் சமரில் தலையில் விழுப்புண் பட்டு அதன் வேதனைகள் முழுமையாக ஆறுவதற்கு முன் இந்தச் சண்டையிலும் அவன் கலந்து கொண்டான். இதனால் சண்டையில் ஒரு கட்டத்தில் அவன் கடலிலிருந்து கரைக்கு அழைக்கப்பட்டான். கரையில் நின்றபடி கடற்புலிகளின் சிறப்புத் தளபதியின் கடடளைக்கேற்றபடி போராளிகளையும் , தரையிறங்கிய போராளிகளிற்குரிய ஆயுத – உணவு விநியோகங்களை ஒழுங்குபடுத்தி நகர்த்திக்கொண்டிருந்தான்.
இந்தச் சண்டைகள் முடிந்து ஊர்கள் பல எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் சிலம்பரசனுக்கு கடற்புலிகளின் அரசியல்ப்பணி மீண்டும் வழங்கப்பட்டது. கைபற்றப்பட்ட ஊர்களை மீண்டும் புதுப்பித்து வளமாக்குவதற்க்காக அவன் உழைத்துக்கொண்டிருந்தான். அதிலும் வடமராட்சி கிழக்கில் ஒரு மாவீரர் துயிலுமில்லம் ஒன்றினை நிறுவவேண்டும் என்ற விருப்போடு தமிழீழ மாவீரர் பணிமனையுடன் தொடர்பு கொண்டு அதற்கான ஏற்பாடுகளையும் செய்துவந்தான்.
மீண்டும் அவன் தன் கடமையைப் பொறுப்பேற்கும் காலம் வந்தது. எந்த வேளையிலும் , எந்த வேலையையும் செய்யக்கூடிய ஆற்றலும் திறமையும் அறிவும் மிக்க அந்தவீரன் அந்தப்பணியை பொறுப்பெடுத்துக்கொண்டான். ஒரு கப்பலின் கப்டனாக அவன் கடலில் பயணித்த போது இந்த சமாதான காலத்தின் விலையாய் அவனையும் அவன் தோழர்கள் பத்துப்பேரையும் இழந்துபோனோம்.
அவன் ஆசைப்பட்டபடி அவனது ஊரில் ஒரு துயிலுமில்லம் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் முதற்கல்லாய் அவன்தான் வருவானென்று நாங்கள் கனவிலும் எண்ணவில்லை.
நினைவுப் பகிர்வு:- புரட்சிமாறன்.
விடுதலைப்புலிகள் (பங்குனி, சித்திரை 2004) இதழிலிருந்து தேசக்காற்று.
பின்குறிப்பு: அண்மையில் தேவிபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் நீச்சல் தடாகம் என ( தவறான பிரச்சாரம் பரப்பும் இலங்கை அரசு இது விடுதலைப்புலிகளின் உல்லாச வாழ்வு என…. ) இது தவறாகும்.
அவ் நீச்சல் தடாகம் இம் மாவீரரின் பெயரில் போராளிகளின் பயிற்சிக்காகவும் சில போரியல் தேவைக்காகவும் அமைக்கப்பட்ட ஒன்று என்பதே உண்மையாகும்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”