லெப். கேணல் கௌசல்யன், மாமனிதர் சந்திரநேரு உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்
லெப். கேணல் கௌசல்யன், மாமனிதர் சந்திரநேரு உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் மீள்கட்டுமான பணிகள் மேற்கொண்டவேளை 07.02.2005 அன்று மட்டக்களப்பு இராணுவ கட்டுபாட்டுப் பகுதியான புனானைப் பகுதியில் வைத்து லெப். கேணல் கௌசல்யன் குழுவினர் பயணித்த வாகனத்தின் மீது சிறீலங்கா இராணுவம் மற்றும் தேசவிரோதக் கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் கௌசல்யன், மேஜர் புகழன், மேஜர் செந்தமிழன், 2ம் லெப்.விதிமாறன் ஆகிய போராளிகளின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
||சிங்கள இனவாத அரசின் போர் வீதிமுறை மீறல்களால் தாய்மண்ணின் நினைவுடன் கல்லைறையில் உறங்கும் மாவீரச்செல்வங்கள்…..
அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமை ஆர்வலருமான மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு 07.02.2005 அன்று மட்டக்களப்பு இராணுவ கட்டுபாட்டுப் பகுதியான புனானைப் பகுதியில் வைத்து லெப். கேணல் கௌசல்யன் குழுவினர் பயணித்த வாகனத்தின் மீது சிறீலங்கா இராணுவம் மற்றும் தேசவிரோதக் கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்து 08.02.2005 அன்று மருத்துவ மனையில் சாவைத் தழுவிய மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு அவர்களின் எ0ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.
இவர் சிங்களப் படைகள் அம்பாறை மண்ணில் புரிந்த அட்டூழியங்களை நேர்மைத்திறனுடன் உலகிற்கு வெளிக்கொணர்ந்தார். இவரின் இனப் பற்றிற்கும் விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து, அவரது நற்பணியைப் கௌரவிக்கும் முகமாக தமிழீழத் தேசியத் தலைவர் மாமனிதர் என்ற அதியுயர் தேசிய விருதை வழங்கி கௌரவித்தார்.
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”