தீயும் நீயே!
பெண்ணைப் பழித்த
கொடியவர் முன் பெண்ணின்
பெருமையை நிலை நாட்டினாய்! – எங்கள்
மண்ணை அழித்த
பகவனை அழித்து நீ
மங்கையர் திறம் காட்டினாய்!
குழந்தைப் பருவத்தில்
கண்முன்னே அழகுக்
கொடியாய் நீ வளர்ந்தாயம்மா! – இன்று
எழுந்தாய்! தமிழரின்
எதிரிகள் தலையில்
இடியாய் நீ விழுந்தாயம்மா!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”