குமார்…. சிங்கத் தமிழனாய்!
சாவை கண்டு
எங்களைப் போல்
தப்பியோடி வந்து!
தமிழீழம் வேண்டியவன்
அல்ல!
சிங்கத்தின் குகைக்குள்ளே
இருந்து
சாவு இப்படித்தான்
வரும் என்று
தொண்டு
பல செய்து
அப்பன் விட்ட
பிழைகளை
அழித்து
அப்பாவித் தமிழர்களின்
உயிர்களுகாய்
பல தொண்டுகள் செய்தவன்!
கடைசி நிமிடமும்
தமிழுக்காய்
முழங்கிவிட்டுச்
சென்று விட்டான்!
யாரு செய்தார்களோ!
சொந்த பிரதேசங்களிலே
பலர் அடையாளம்
தெரியாதவர்களால்
அடிக்கடி
பிணமாகின்றனர்!
இதை மட்டும்
எப்படி பிடிப்பது?
சிங்கத் தமிழனாய்
இருந்து
புலித்தமிழனுக்காய்
குரல் கொடுத்தவன்!
– எம் தேசக்காற்றில் கலந்த மாமனிதன் நினைவில்…..
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”