புதுயுகத்தின் போர்ப் பிழம்பு
நினைவலைகள் எப்போதும்
உங்களையே நினைத்திருக்கும்
பனைக்கீடாய் உழைக்கும்
தம்பிகை பரபரக்கும் குறிபார்க்கும்.
பள்ளத்துள் வீழ்ந்த தாக!
யார் சொன்னது? காட்டு!
பள்ளத் துள்பதுங் குவது
பைந் தமிழ் இனம் மீட்கவே!
வெல்ல முடியாதது எது? உனக்கு!
நீ ஒரு சுபாஸ் சந்திரபோசு.
அள்ளக் குறையாத அறிவுக்
களஞ்சியம்; நீ ஒரு செண்பகம்.
தென்னன் புகழ்பாட வந்த நல்
தேர் பாகன்: தம்பி மறவன்!
என்னென் பேன் அவன் ஆற்றல்
போற்று தலுக்குரிய புதுயுகம்.
மரித்து விடவர்கள்: மீண்டும்
உதித்து விடுவார்கள்! காலை!
எரிந்து விட்டவர்கள் ஈழ
மறவர்கள் குதித்து! வருவார்….. நாளை!
தமிழீழம் மலர்க!
தயாகமாகுக!
(1997 வரையப்பட்ட கவிதை)
– கவிஞர் கு.கோ. இராசன்
தமிழகம்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”