நீங்கள் என்றோ ஒருநாள் தாயகம் நோக்கிய பயணத்தை தொடர்வீர்கள்
நீங்கள் என்றோ ஒருநாள் தாயகம் நோக்கிய பயணத்தை தொடர்வீர்கள்
அன்று எமது தாயகம் ஒரு சுதந்திர தேசமாக அமைந்திருக்கும்.
புலம்பெயர் தமிழ் மக்களுக்கு தேசியத் தலைவர் பிரபாகரனின் வேண்டுகோளிலிருந்து….
… உலகில் எந்தப் பகுதியில், எந்தச் சூழழில், எந்தத் தகுதியில் வாழ்ந்தாலும் தமிழீழத்தில் தான், அந்தத் தாயக பூமியில்தான் உங்கள் வேர் ஆழப் புதைந்து கிடக்கிறது. இந்த மண்ணில் தான் உங்கள் இனத் தனித்துவத்தின் அடையாளம் ஆழப்பதிந்து கிடக்கிறது. இந்தத் தாயக தேசம் எதிரியின் ஆதிக்கப்பிடியில் சிக்கி அழிந்து போகாது பாதுகாப்பதில் உங்களுக்கு பெரும் பங்கு உண்டு. பொறுப்பு உண்டு. கடப்பாடு உண்டு…
… இன்றைய காலமும் சூழழும் உங்களது பங்களிப்பைத்தான் வேண்டிநிற்கிறது. காலம் காலமாக எமது போராட்டத்திற்கு உதவி வருகின்றீர்கள். உங்களது பங்களிப்புக்கள் எமது போராட்டத்தின் வளர்ச்சிக்கும் எழுட்சிக்கும் பெரிதும் உதவியாக இருக்கின்றது. ஈழத்தமிழரின் போராட்ட வரலாறு இதனை என்றும் பதிவு செய்து வைத்திருக்கும்…
தமிழர் தேசத்தின் பாதுகாப்பும் எதிர்கால அரசியல் வாழ்வும் இன்றைய போரின் போக்கில் தான் தாங்கியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் தமிழினத்தின் போராட்ட சக்தியாகிய எமது இயக்கத்தின் பலத்திற்கும் வளத்திற்கும் வலுச்சேர்ப்பது உங்களது பொறுப்பும் கடமையும் ஆகின்றது.
– தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்…
(1998ம் ஆண்டு புலம்பெயர் தமிழ் மக்களுக்கு விடுத்த அறிக்கையிலிருந்து)
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”