மலரட்டும் தமிழீழம்
மாவீரத் தெய்வங்களே…
ஈழ தேசத்தின்
வரலாற்றில்
உங்களுக்கோர்
அழியா இடமுண்டு….
மழையை அடுத்த
வானத்தில்தான்
ஒரு தெருவிருக்கும்…..
உங்களை அடுத்த
தமிழீழத்தில்தான்
நாளை விடுதாளி
விருட்ச மாகும்!
உங்கள் இறப்புகள்
சாதாரணமானதல்ல….
ஓர்
இனத்தின்
இருப்பிற்காக
தம்மை
அழித்தவர்கள்
நீங்கள்….
நீங்கள் அழிந்தாலும்
உங்கள்
அடையாளங்கள்
என்றும்
அழிவதில்லை….
ஆயிரமாயிரம்
தனிமனித வராலாறுகளாய்
உங்கள்
வாழ்க்கை பேசப்படுகிறது….
நாளை
ஈழ விடியலின்
வெளிட்சம்
எல்லோருக்கும்
வேண்டும் என்று
திசைகளை நீங்களே
தீர்மானித்து
உதிக்கிறீர்கள்….
மரணத்தை சுவாசிக்கும்
மகத்துவம்
புரிந்தவர்கள் நீங்கள்!
மண் விடுதலை
உங்களால் சாத்தியமாகப்
போகிறது….
ஈழ மண்ணுக்குள்
வாழ்ந்து
ஓர் இனத்தின்
விடுதலையை
விதைக்கிறீர்கள் !
விதைகள் ஒரு நாள்
விருடசங்களாகும்…
வேங்கைகள் கனவு
நினைவுகள் ஆகும்…..
தேசத்தின்
ஆன்ம பலமாக விளங்கும்
மாவீரர்களே….
நாளை காலத்தின்
கட்டளையாய்
இறப்புக்கள்
வெல்லும்.
உங்கள் உயிரின்
ஒளியாய்
தமிழீழம் மலரும்….
– பூங்குழலி வீரன். (சுடர்மகள்)
(மலேசியா : 2005 வரையப்பட்ட கவிதை)
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”