கல்லறை கண்டு நிமிர்வோம்
முதல்நாள் இரவு கண்தூங்கும் பொது
அம்மா சொன்னாள்
நாளை விடிகாலையில் எழும்போது
மாவீரர் ஈகைச்சுடரில் விழித்தெழும்படா மகனே என்று
அவர் சாவை மிதித்திட
நஞ்சுமாலை நெக்ஞ்சிலடா
வாழ்வை மதித்தவர்
வானம் பிளந்திட கானம் இசைத்திட
வையகம் நடந்தவர்
தாய் நிலம் காப்பதற்காய்
தம்முயிரை ஈகையாக்கி
தளராத துணிவுடன் நடந்துவாடா!
தாயை மிதித்தவன்
தளம்தேடி நடந்தவர்
இனியசாவு
எப்படி நடந்ததென
உனக்குத் தெரியுமாடா?
அப்பா எங்கே
அண்ணா எங்கே
அக்கா எங்கே
தங்கை எங்கே…..
எதிரிகளம் புகுந்து
உயிர்கொடுத்த உத்தமரது
பொன்னடி தொழுது ஏழு
விடிவு பிறக்குமடா !
காடும் மலைகளும்
எனத் திரிந்தவர்கள்
தாலாட்டிய தமிழன் உயிரானவர்
உடல் மண்ணுக்கென்றானவர்
வாழைபோல் பரம்பரையை
விதைத்து வளர்த்திட இரத்தம் பாய்ச்சியவர்
மண்ணின் மைந்தர்கள் உறங்கிடும்
கல்லறையல்ல
செஞ்சூரியனும் துருவ நட்சத்திரங்களுமாய்
ஒளிரும் விண்மீன்கள்
தினம்தொழுதும் சந்நிதி
பூமலர் கொண்டு
பாமலர்பாடும் அவர் பொன்னடி
அம்மா எனக்குன் துயரம் புரிகிறது
அவர்கள்
அணிந்த ஆடைகளையும்
தூக்கிய சுடுபொறிகளையும்
நடந்த பாதைகளையும் நினைக்கிறேன்
தேசத்தை நேசித்துவிட்ட
அனல் மூச்சுக்களையும்
விழித்திருந்த விழிப்பினில்
செம்பொறி ஏறிய கண்களையும் உணர்கிறேன்
கணத்தில் வெடித்திடும்
திடம்கொண்ட தோள்களையும் நானும்
தொட்டிடத் துடிக்கிறேன்.
– மா.கி.கிறிஸ்ரியன்.
(2005ம் ஆண்டு வரையப்பட்ட கவிதை)
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”