உறுதியின் உறைவிடத்தில் …
உங்கள் கால்கள் தேடிய
எல்லையை அடையும் வரை
உங்கள் கரங்கள் ஏந்திய
துப்பாக்கி பார்த்த குறியை நோக்கி
உங்கள் இதயம் சுமந்து
இலட்சிய தாகத்தை சுமந்து
உங்கள் உதடுகள் சொல்லத் துடித்த
தேசிய கீதத்தைச் சொல்வதற்காய்,
நீங்கள் சுவாசிக்க நினைத்த
‘சுதந்திரக் காற்றைத்’ தேடிக்கொண்டு
உங்கள் கண்கள் கண்ட
‘கனவு’களை நனவாக்க
உங்கள் காதுகள் கேட்ட
அதே அதே கட்டளை’யின் கீழ்
நாங்களும் உங்களை நோக்கித்தான்!
உங்களுக்காக
நாங்கள் சமர்ப்பிக்கத் துடிப்பது
‘வீரவணக்கங்களை’ மட்டுமே
தமிழீழத்தின்
‘விடுதலை’யையும் சேர்த்துத்தான்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”