கிளிமொழி …..
களப்படப்பிடிப்பாளர் வீரவேங்கை கிளிமொழி
சடாச்சரம் செல்வலட்சுமி
மாதகல் – யாழ்ப்பாணம்
பிறப்பு : 03.09.1981 – வீரச்சாவு : 02.04.2000
கிளிமொழி …..
சுடுகருவி தாங்கிய வீரர்களோடு
சுடமுடியாத கருவி கொண்டு
களமுனையெங்கும் உலாவந்தாள்.
களப்புலிகள் வீரத்தைக்
புகைப்படக்கருவிகுள் சிறைப்பிடிக்க
நெருப்பு மழைக்குள்ளும்
நிமிர்தியவள் நின்றாள்.
இவள் சிந்தனைத் தூரிகைகள்
வரைந்த அந்த ஒளிஓவியங்கள்
உலகத் திசையெங்கும் தாயக
வீரத்தை முரசறைந்து
கொண்டிருக்கும்.
வேதனையின் வாடுகின்ற உறவுகளின்
கோலங்களை வெளியுலகெங்கும்
வெளிப்படுத்திக் கொண்டிருக்கும்.
பொய்தனைப் பரப்பும் பகைவனின்
செய்தியைப் பொய்களாக்கும்.
வரிப்புலிகள் சேனைக்குள்
கலைப்புலியாய் இவள் மிளிர்ந்தாள்
களம் நடுவே புகைப்படக்கருவியுடன் இவள் மடிந்தாள்.
வரலாற்றைப் பதியும்வேளை
வரலாறாய் வீழ்ந்தவளே…..
நீ பதித்த காலப் பதிவுகள் போல்
என்றும் நீ வாழ்வாய் – எம்மோடு.
எங்கள் நெஞ்சில் உந்தன் தாகம்
உந்தன் சுவட்டில் உந்தன் பாதம்.
ஓயாத அலைகள் – 03 நடவடிக்கையின் போது மாமுனை, குடாரப்புப் பகுதியில் தரையிறங்கி கண்டி வீதியை ஊடறுத்து நிலை எடுத்திருந்த வேளை சிறீலங்காப் படையினருடன் நடைபெற்ற மோதலைப் படம்பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவேளை இவர் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.
– செந்தோழன் (கார்த்திகை 2000)
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”