தாயக விடுதலைக் கனவோடு …..
தாயகவிடுதலைக்கனவோடு
சிட்டென்று பெயர் கொண்டு…
சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
சட்டென்று போனானே…
சிறகு முளைக்கும் முன்னால்!
பாடல்கள் பல தந்து நின்றவன் – மண்ணின்
தேவைகள் சில முந்த…
தன் காதலையும் தேடலையும்,
ராகம் பாட விட்டுவிட்டு ,
தான் காதலித்த மண்ணுக்காய்…
சிட்டாய்ப் பறந்து போனானே பாடலோடு!
வந்த பகை நின்று முறிக்க, இடையிடை
புகுந்தவன்… தன் வாழ்வினை
விடை கொடுத்து… வந்தானே பாடையோடு!
நீ தந்த ராகங்களும் பாடல்களும்…
சிறுநாக்காய்…. எம் தொண்டைக் குழியில் இன்னும்,
அவ்வப்போது அலறி இசைக்கும்! – ஆனால்
உன்னினிமை ராகம் கேட்க நீ வரணும் மீண்டும் சிட்டாய்!
உறுதியாய் ஒன்றுமட்டும்….
எம் தாகம் தீரும்வரை… உன் ராகம் ஓயாது!
உன் ராகமும் தாளமும் இன்றும் எம்மோடு,
தணியாத தாகமாய்… தகிக்கிறது!!!
நன்றி:- சிட்டு இணையம்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”